சுமேரியர்கள் ..பணம்.!!
மனிதர்கள் இலைகள், சோழி, மாடு , பார்லி, விதைகள் போன்றவற்றை பணமாக பயன்படுத்தி வந்தனர். இவை அழியக்கூடியதால், அழியாத பணம் என உலோகத்தைக் கண்டுபிடித்தனர்.
பலவகையான உலோகங்கள் இதில் போட்டிக்கு வந்தன. வழக்கம் போல இங்கும் சுமேரியர்கள்தான் பணத்தை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள். இது நடந்தது சுமார் 5 ,௦௦௦000 ஆண்டுகளுக்கு முன்பு.
இவர்கள்தான் பணத்தின் எடைக்கான ஓர் அலகை உருவாக்கியவர்கள்.அதன் பெயர் ஷேகல்(shekel ).இது ஒரு அக்காடியன் சொல். ஷி (she )என்பதற்கு பார்லி என்று பொருள் இது குறிப்பிட்ட (எவ்வளவு) பார்லியின் எடை என்பதைக் குறிக்கும்.ஏனெனில்முன்பெல்லாம் பார்லி பணமாகவே பயன்பட்டது. ஒரு ஷேகல் என்பது 180 பார்லி. இது தற்போதையை 11 கிராம் ஆகும். .
லிடியன் நாணயம்.தங்கமும் வெள்ளியும் கலந்த எலெக்ட்ரம் கி.மு 650
தங்கம்+வெள்ளி=எலெக்ட்ரம்(இயற்கையின் கலப்பு .)..!
ஹெரடோடசின் கருத்துப்படி, கி.மு 650 களில் லிடியர்கள்தான் முதன் முதலில் தங்கமும் , வெள்ளியும் கலந்த நாணயத்தை அச்சிட்டவர்கள் .இவர்கள்தான் முதலில் நாணயத்தை உருவாக்கினர் என இப்போதுள்ள சான்றுகள் மூலம் நாணயவியலாளர்களால், இப்போது அறுதியிட்டு சொல்லப்படுகிறது. இதனை அவர்கள், இயற்கையிலேயே கிடைத்த கலப்பு உலோகமான தங்கமும் வெள்ளியும் கலந்த எலெக்ட்ரம் என்னும்உலோகத்தால் செய்தனர்.
பேரரசன் அலெக்சாண்டரின் தங்க நாணயம்.கி.மு 330. அப்போதுதான் உலகின் முதல் பணவீக்கம் துவங்கியது.
பின்னர் வெள்ளியும் செம்பும் கலந்தும் உருவாக்கினர். இவை அப்போது, ஸ்டாட்டர்(Stater ) என்ற பெயரில் அழைக்கப் பட்டது. கிரேக்கத்தில் ஸ்டாட்டர் என்பதற்கு, எடை என்று பொருளாகும் அன்றைய நாணயம் .4 .7 கிராம் எடையில் அச்சடிக்கப் பட்டது. இது ஒரு ஸ்டாட்டரில் மூன்றில் ஒரு பகுதி. ஒரு சிப்பாயின் அன்றைய ஒரு மாத சம்பளம் (14.1கிராம்.. எலெக்ட்ரம்).ஒரு ஸ்டாட்டர்.. !அதன் பின், நாணயத்தில் முத்திரை குத்தினர். இதனைச் செய்தவர்கள் அந்தோலியன் என்ற வாணிபத்தினர். காலம் கி,மு. 640 . நூறாண்டுகள் புழக்கத்தில் இருந்த பின்பே, இவை தங்கம், வெள்ளி நாணயங்கள், தனித்தனியாக வந்த பின் மறைந்தன.
நன்றி: மோகனா அக்கா
0 comments:
Post a Comment