அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



சூரிய கிரகமும் மூட நம்பிக்கையும் விண்வெளி அதிசயங்களில் சூரிய கிரகணமும் ஒன்று. சூரிய கிரகணம் ஏற்படப் போவது அறிந்தால் அதனைக் காண அனைவறும் ஆசைப்படுவார்கள். 


விண்வெளியில் நடக்கும் இந்த அற்புத காட்சி பல நாடுகளுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால் விஞ்ஞானிகள் தங்கள் கணிப்பின் மூலம் எந்தெந்த நாடுகளில் தெளிவாக தெரியும் என்றும் கூறுகின்றார்களோ அந்த நாட்டில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்கள் பரந்து செல்வார்கள். அந்த வகையில் 21 ஆவது நூற்றாண்டின் 4 ஆவது சூரிய கிரகணம் ஏற்பட்டது. 


இந்த சூரிய கிரகணத்தை துருக்கி நாட்டில் மிக துல்லியமாக பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் அறிவித்தன. இதனால் ஏராளமானோர் சூரிய கிரகணத்தை பார்க்க துருக்கியில் குவிந்தனர். முழு சூரிய கிரகணம் மாலை 4.24 மணிக்கு தெரிந்தது. வானில் நடந்த இந்த அதிசய காட்சியை பலரும் கண்டு வியந்தன. 
இது ஒரு புறமிருக்க உண்மையில் சூரிய கிரகணம் என்றால் என்ன? 


சூரியன்,சந்திரன், பூமி ஓரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. ஆனால் பழந்காலத்தில் சூரிய கிரகணம் தோன்றுவது ஏதோ இரு கெட்ட செயல் நிகழப்போவதற்கான அறிகுறியாக நினைத்து பயந்தனர். உண்மையில் சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் விளக்கம் அளிக்கப்பட்ட பொதிலும் அதனை பற்றிய மூட நம்பிக்கைகள் மறைந்தப்பாடாக தெரியவில்லை. 


பழங்காலத்தில் சூரிய கிரகணம் தோன்றும் போது நாட்டின் போரும், மோசமான சம்பவங்கள் ஏற்படுவதற்கான அறிவிப்பாக கருதப்பட்டது. சூரிய கிரகணம் ஏற்பட்டால் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். காரணம் சூரிய கிரகணத்தால் உணவுப் பொருட்கள் கெட்டு விடும் என்ற நம்பிக்கையும் நமது நாட்டு மக்களிடம் இருந்தது. சூரிய கிரகண நம்பிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் தான். 


அதாவது சூரிய கிரகணத்தின் போது கர்பிணிப் பொண்கள் வெளியே சென்றால் பிறக்கப் போகும் குழந்தை குருடாக பிறக்கும் அல்லது கிழிந்த உதடுடன் பிறக்கும் என நம்பப்பட்டது. சூரிய கிரகணம் பற்றிய மூட நம்பிக்கைநமது நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளது. சீன நாட்டினர் டிராகன் என்ற விலங்கு சூரியனை விழுங்கும் போது சூரிய கிரகணம் தோன்றுவதாக நினைத்தனர். சூரிய கிரகணம் ஏற்படும் போது தங்களுக்கு ஏற்படும் பயத்தை போக்க வெடி வெடித்தனர். 


கடந்த 2001 ஆம் ஆண்டு நைஜீரியா நாட்டில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மக்கள் மேல் உள்ள கோபத்தால் சூரிய கடவுள் கிரகணத்தை ஏற்பட செய்கின்றார் என நம்பினர். அறிவியல் சிந்தனைகள் வளராத பழங்காலத்தில் சூரிய கிரகணம் எதனால் ஏற்படுகின்றது? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை அறிய பலர் ஆர்வம் காட்டியுள்ளனர். இதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள். 


இந்த ஆராய்ச்சி கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தொடங்கி விட்டது என்று வரலாறு கூறுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்புள்ள காலத்தில் சீன மன்னர் யோவிற்கு சூரிய கிரகண ரகசியத்தை அறிய ஆர்வம் ஏற்பட்டது. இதற்கான கிஸ் மற்றும் ஹோ என்ற இரு சகோதரர்களை ஆராய்ச்சி0 செய்து முடிவை தெரிவிக்குமாறு ஆணையிட்டனர். அவர்கள் இதற்கான இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 


எனினும் கிரகணம் ஏற்படுவதற்கான சரியான காரணம் அவர்களுக்கு தெரிய வில்லை. இதனால் கோபம் அடைந்த மன்னா் அந்த சகோதரர்களின் தலையை வெட்டி எறிய உத்தரவிட்டார். இதன் பின் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற ஆராய்ச்சியாளர் சூரிய கிரகணம் ஏற்படுவது பற்றி ஓரளவிற்கு அறிந்து இருந்தார். சூரிய கிரகணம் ஏற்படுவதால் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாது இன்று உலகிற்கு அறிவித்தார். ஆனால் பெருவாரியான மக்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. 


இங்கிலாந்து நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜான் மில்டன் என்பவரை தெரியாதவர் இருக்க முடியாது. அலர் எழுதிய “பேரடைஸ் லாஸ்ட்” என்ற நூலில் சூரிய கிரகணம் ஏற்படுவதால் நாட்டின் ஒரு பகுதியில் அழிவு ஏற்படும். மன்னராட்சியில் மாற்றம் நிகளும் இன்ற பயம் ஏற்படும் என குறிப்பிட்டு உள்ளார். ஜாப்பான் நாட்டில் சூரிய கிரகணத்தின் போது கிணறுகள் மூடி வைக்கப்படும். காரணம் சூரிய கிரகணத்தின் போது இருண்ட வானில் இருந்து விழும் விஷம் கிணற்றில் விழுந்து விடும் என நம்பினர்.





Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.