அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

இதயம் குறித்த அபூர்வ தகவல்கள்


பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட அதிகமாக (அதிக தடவை) துடிக்கும்.ஒவ்வொருவரின் இதயமும் சுமார் 1 பவுண்ட் (300 கிராம்) எடையுடையதாக இருக்கும்.




இதயத் துடிப்பு, ரத்தத்தை 30 அடி தூரத்திற்கு செலுத்துமளவிற்கு அழுத்தம் கொடுக்கும்.முதன் முதலில் திறந்த இதய அறுவை சிகிச்சை 1893 ஆம் ஆண்டு டாக்டர் டேனியல் ஹால் வில்லியம்ஸ் என்ற மருத்துவ அறிஞரால் செய்யப்பட்டது.


‘நீண்ட மோதிர விரல்’ கொண்ட ஆண்களுக்கு மாரடைப்பு எளிதாக ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


‘ஆலீவ்’ எண்ணெய், ரத்த கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்து மென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை. இதற்கு இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலீவ் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் காரணமென கண்டறியப்பட்டுள்ளது. 


ஒவ்வொருவரின் சராசரி வாழ்விலும் இதயம் சுமார் 1 மில்லியன் பேரல் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துகிறது. 


1967 ஆம் ஆண்டு உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்பிரிக்காவில் செய்யப்பட்டது.


பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு காலை 8 முதல் 9 மணி நேரத்தில் ஏற்படுகிறது.


காதலுக்கும் இதயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. அது மூளை & ஞாபகம் & நினைவு & மனம் தொடர்புடையது. பெரும்பாலான மாரடைப்பு திங்கட்கிழமைதான் ஏற்படுகிறது. 


சராசரியாக ஒரு நுண்ணிய ரத்தநாளத்தின் நீளம் 1 மி.மீ. அளவாகும்.


நமது உடலிலுள்ள அனைத்து நுண்ணிய ரத்தநாளங்களின் மொத்த அளவு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை விட பெரியதாகும்.


ஆண்களைவிட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.


உலக முழுவதும் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1.5 கோடியாகும்.


வளர்ந்த நாடுகளில் இறப்பிற்கு 50% இதயக் கோளாறுகளே காரணமாக இருக்கின்றன. வளரும் நாடுகளில் இது 15 சதவீதமாக உள்ளது.





Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.