அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

“about blank” சொல்லும் பிரச்னை என்ன ?



“about blank”  என்பது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி மாதிரி. இது அனைத்து பிரவுசர்களின்  ஒரு பகுதியாகும்.  நீங்கள் உங்களுடைய பிரவுசரைத் திறந்து, அதன் அட்ரஸ் பாரில், “about blank”   என டைப் செய்தால், காலியான ஒரு பக்கம் காட்டப்படும். 


உங்கள் பிரவுசரைத் திறக்கும்போது இது கிடைத்தால், உங்கள் ஹோம் பேஜ் இணைய முகவரியை மாற்றினால், இது சரியாகிவிடும்.  ஆனால் நம் சகோதரி வாசகி தெரிவித்திருப்பது சற்று ஆபத்தான விஷயமாகும். அவருடைய கம்ப்யூட்டரில் பிரவுசர் மெதுவாக இயங்க ஆரம்பித்தவுடன், இது போல அடிக்கடி வருகிறது. கம்ப்யூட்டர் பிழைகள் அதிகம் தெரிந்தவுடன் இந்த  “about blank”  கிடைக்கிறது. 


இதற்குக் காரணம்  “about blank”  எனப்படும் பிரவுசர் ஹைஜாக்கர்  என விளக்கப்படும் ஒரு ஸ்பைவேர் ஆகும். இது ஒரு மால்வேர் புரோகிராம். இது உடனடியாக நீக்கப்பட வேண்டும். பொதுவாக ஒரு பிரவுசர் ஹைஜாக்கர், உங்களுடைய ஹோம் பேஜினை எடுத்து விட்டு, வேறு ஒரு இணைய தள முகவரியைப் போட்டு வைக்கும்.  மேலும் இந்த பிரவுசர் ஹைஜாக்கர் ஸ்பைவேர் புரோகிராம், இது இறங்கிய கம்ப்யூட்டரின் சிஸ்டம் இயக்கத்திற்குத் தேவையான திறனை, தான் எடுத்துக் கொள்ளும். 


கண்ட்ரோல் பேனலில், புரோகிராம் லிஸ்ட்டில் இந்த  “about blank” ஹைஜாக்கர் பெயர் இடம் பெறாது. மேலும், நீங்கள் உங்கள் ஹோம் பேஜ் முகவரியை மாற்றினால், மீண்டும் உங்கள் பிரவுசரை இயக்கும்போது, இந்த “about blank”  அங்கு அமர்ந்து கொள்ளும். 


பொதுவாக CoolWebSearch  வகை புரோகிராம்களை டவுண்லோட் செய்திருந்தால்,   இந்த ஹைஜாக்கர் புரோகிராம் இலவசமாகத் தானும் வந்து ஒட்டிக் கொள்கிறது. 


முதலில் கம்ப்யூட்டரில் உள்ள தற்காலிக கோப்புகள், குக்கீஸ் ஆகியவற்றை நீக்க வேண்டும். இதற்கு சிகிளீனர் போன்ற புரோகிராம்கள் உதவும். அல்லது நீங்களாகவும் நீக்கலாம். அடுத்து பிரவுசரை மூடி வெளியேறவும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ திறந்திருந்தால், அனைத்து விண்டோக் களையும் மூடவும். பின்னர் கீழே குறிக்கப்பட்டுள்ளபடி செயல்படவும்.


விண்டோஸ் 7 அல்லது விஸ்டா வில்:
ஸ்டார்ட் கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் inetcpl.cpl   என டைப் செய்திடவும். பின் என்டர் தட்டவும்.  நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தினால், ஸ்டார்ட் பட்டன் அழுத்தியபின் கிடைக்கும் ரன் பாக்ஸில் இதனை டைப் செய்திடவும்.  பின் என்டர் தட்டவும். கிடைக்கும் விண்டோவில் ஜெனரல் டேப் தேர்ந்தெடுத்து, Browsing History (பிரவுசிங் ஹிஸ்டரி) என்பதன் கீழ் கிடைக்கும்   Delete  (டெலீட்) பட்டனை அழுத்தவும். 


Cookies   (குக்கீஸ்) என்பது தவிர மற்ற அனைத்து பாக்ஸ்களிலும், டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் டெலீட் பட்டனை அழுத்தவும்.  அடுத்து நீங்கள் CWShredder  என்பதை டவுண்லோட் செய்திட வேண்டும். இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து CoolWebSearch  புரோகிராம்களை நீக்குவதற்கென தயாரிக்கப் பட்டதாகும். எனவே  CWShredder  டவுண்லோட் செய்து, அதனை உங்கள் டெஸ்க்டாப் பக்கத்தில் வைத்துக் கொள்ளவும். 


பின்னர் அதன் ஐகானில் இருமுறை கிளிக் செய்திடவும். இந்த புரோகிராம் இயங்கத் தொடங்கும். இப்போது கிடைக்கும் விண்டோவில் I Agree  என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் விண்டோவில் “Check For Update”  என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அப்டேட் இருந்தால், அதனை டவுண்லோட் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் Fix    பட்டனை அழுத்தவும். (இந்த செயல்பாடு, நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது விண்டோஸ் மீடியா பிளேயரைத் திறந்து வைத்திருந்தால், நடைபெறாது). Fix   செய்த பின்னர் ஓகே கிளிக் செய்தால், மேலே சொன்ன புரோகிராம்கள் திறந்திருந்தால்  CWShredder   அவற்றை மூடும். 


ஸ்கேனிங் மேற்கொள்ளப்படும். இது சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளும். அடுத்த விண்டோவில் கிளிக் செய்திடவும். CoolWebSearch  புரோகிராம்கள் ஏதேனும் இல்லை என்றால், அந்த செய்திக்கான விண்டோ கிடைக்கும். இருந்தால், அவை என்னவென்று காட்டப்பட்டு, அவை எப்படி நீக்கப்பட்டன என்ற செய்தி காட்டப்படும். இனி, கம்ப்யூட்டரை மீண்டும் இயக்கி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை இயக்கவும். இப்போது நீங்கள் அமைத்த ஹோம் பேஜ் காட்டப்படும்.



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.