அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeஉலகம் அழியப் போகிறது என்று உள்ளூர் சாமியார்கள் முதல் நாசா விஞ்ஞானிகள் வரை அவ்வப்போது பீதி கிளப்புவார்கள். ‘2010, 2012&ல் உலகம் அழிஞ்சா இப்படித்தான் இருக்கும்.. பார்த்துக்கோங்க’ என்று சில ஹாலிவுட் படங்களும் அடிக்கடி வெளியாகி லப்டப்பை அதிகரிக்கின்றன.
 

கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தென்அமெரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் இனம் மயன் இனம். கி.மு. 3113&ல் ஆரம்பித்து மிகத் தெளிவாக அந்த காலத்திலேயே காலண்டர் தயாரித்திருக்கின்றனர். அந்த காலண்டர் 2012&ம் ஆண்டுடன் முடிகிறது. ‘மயன் மக்களே சொல்லிட்டாங்க.. 2012&ல் உலகம் அழியப்போகுது’ என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. 

புரளிகள் ஒரு பக்கம்.. ‘ஒருவேளை அழிஞ்சிடுமோ’ என்று சீரியசாய் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம்.‘அழிகிறதோ, இல்லையோ.. 2012&ம் ஆண்டு டிசம்பர் 21&ம் தேதி படுபயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது நிச்சயம்’ என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக வல்லுனர்கள்.

‘‘2012 டிசம்பர் 12&ம் தேதி இயல்புக்கு மாறாக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும், தவறினால் உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக உஷ்ணக் கதிர்கள் மற்றும் மின்காந்த அலைகளைத் தாங்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை நெருங்கும் போது பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தகிக்கும். உலகம் முழுவதும் மின்சாரம், விண்கலங்கள், செயற்கைக்கோள், தொலைதொடர்பு, செல்போன் ஆகியவை அனைத்தும் ஸ்தம்பிக்கும்’’ என்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.

கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989&ம் ஆண்டு தாக்கியது. தொடர்ச்சியாக 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்துவிட்டது. 2012&ல் வரப்போகும் சூரியப் புயல் மொத்த பூமியையும் தாக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் உறுதிப்படுத்தி உள்ளார்.Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.