அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



2009ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது (57வது தேசிய விருது) பெறும் படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பட்டியலை விருது குழுத்தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:




சிறந்த படம்  : குட்டி ஷ்ரங் (மம்முட்டி நடித்த மலையாள படம்). இந்த படத்தை தயாரித்த ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், படத்தின் டைரக்டர் ஷாஜி என்.கருணுக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் தங்கத்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த நடிகர் : அமிதாப் பச்சன் (பா என்ற இந்திப்படத்துக்காக இந்த விருது வழங்கப்படுகிறது). அமிதாப்புக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த தமிழ்ப்படம் : பசங்க. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமாருக்கும், டைரக்டர் பாண்டிராஜூக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசும் வெள்ளித்தாமரை விருதும் வழங்கப்பட உள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் : ஜீவன், அன்பரசு (இவர்கள் இருவரும் பசங்க படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள்) . இவர்களுக்கு அகில இந்திய அளவில் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான வெள்ளித்தாமரை விருதும், தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த வசனகர்த்தா : டைரக்டர் பாண்டிராஜ் (பசங்க படத்துக்காக வழங்கப்படுகிறது). இவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும்,  வெள்ளித்தாமரையும் பரிசாக கிடைக்கும். 

சிறந்த பொழுதுபோக்கு படம் : 3 இடியட்ஸ். இதன் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் தலா ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த ரீ ரெக்கார்டிங் : 3 இடியட்ஸ்

சிறந்த பாடல் : 3 இடியங்ஸ்

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த படம் : டெல்லி 6. (இப்படத்துக்கு நர்கீஸ் தத் விருது கிடைக்கும்). இதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு தலா ரூ.ஒன்றரை லட்சம ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்பட உள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் : இளையராஜா (பழசிராஜா என்ற மலையாள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவருக்கு ‌ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை வழங்கப்படும்.

சிறப்பு விருது : நடிகை பத்மப்ரியா (இவர் பல படங்களில் சிறப்பா நடித்ததற்காக இந்த விருது பெறுகிறார்). இவருக்கு சிறப்பு விருதுக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தேசிய சிறந்த படம் : வெல்டன் அப்பா - இந்திப்படம் (சமூக பிரச்னைகளை விளக்கும் தேசிய சிறந்த படத்துக்கான விருது இப்படத்திற்கு வழங்கப்படுகிறது) இதன் தயாரிப்பாளர், இயக்குனருக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை வழங்கப்படும்.

சிறந்த குழந்தைகள் படம் : புட்டானி பார்லி (கன்னடப்படம்) இதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.ஒன்றரை லட்சமும், வெள்ளித்தாமரையும் பரிசாக வழங்கப்படும்.  

சிறந்த இயக்குனர் : ரீதுபர்னோ கோஷ் (அபோகோமன் என்ற வங்காளப்படத்தை இயக்கியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவருக்கு ரூ.இரண்டரை லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் தங்கத்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த நடிகை : அனன்யா சாட்டர்ஜி (அபோகோமன் என்ற வங்காளப்படம்)  இவருக்கு இவருக்கு வெள்ளித் தாமரையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த பின்னணி பாடகர் : இஸ்லாம் (மகாநகர் அட் கொல்கத்தா என்ற வங்காள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது) இவருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த பின்னணி பாடகி : நீலாஞ்சவா சர்க்கார் (ஹவுஸ் புல் என்ற வங்காள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது) இவருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த ஒளிப்பதிவாளர் : ரசூல் பூக்குட்டி (குட்டி ஷரங்க் என்ற மலையாள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவர் ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.