எப்போழுதும் இன்டநெட்லயே நேரத்தை செலவழிக்கிற படியால் நியுஸ் பேப்பர் வாசிக்க நேரம் கிடைப்பது அரிது.
இன்று என்னதான் பேப்பர்ல போட்டு இருக்கிறாங்க என்று பார்த்தேன்.வாசித்து கொண்டு செல்கையில் தேவைகள்யென்ற ஒரு பகுதி உள்ளது.
அவ் பகுதியில் விளம்பரங்கள் மற்றும் மணமகன் மணமகள் தேவை என்று பலதரப்பட்ட அம்சங்கள் காணப்படும்.
அதையையும் பார்ப்போமென்று மணமகன் தேவை பகுதியை பார்த்தேன்.அதில் இப்படி ஒரு மணமகன் தேவையென போடப்பட்டு இருந்தது.
21 வயதுடைய மணமகளுக்கு தாயார் நல்ல வரனை எதிர்ப்பார்கின்றனர்.அது தப்பல்ல…மேலும் வாசித்து செல்கையில் இவர் விவாகரத்து பெற்றவர். அதில வேற வெளிநாட்டு மாப்பிள்ளை எதிர்பார்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனக்கு அதை பார்த்ததுமே சற்று வியப்பாக இருந்தது.
பெண்ணுக்கு தற்போதைய வயது 21.தமிழர் கலாச்சாரம் எவ்வாறு செல்கிறது என்பதை சற்று சிந்தித்து பார்த்தேன்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.ஆனால் தற்கால திருமணமோ நேற்று விதைத்து இன்று அறுவடைக்கு தயார்ராகும் பயிராக உள்ளது.
எனது கருத்தின்படி பெண்ணின் திருமண வயது 23, 24 .இதை பார்க்கும் போது வயது 21.அவ்வாறு பார்த்தால் பெண்ணுக்கு 18 ,19 வயதிலேயே திருமணம் நடைபெற்று இருக்கும்.
பெற்றோருக்கு சில அறிவுரை கூற விரும்புகிறேன்.
நவீன கால பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்ப்பதை ஒரு ஸ்டைலாக கொண்டுள்ளனர்.அதை நான் தப்பு என்று கூறவில்லை.நீங்களும் எதிர்பார்ப்பது மகள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதையே.
ஆனால் வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்ப்பீர்களானால் அதற்கு முதல் மணமகனை பற்றி தீர விசாரித்து பெண்ணை திருமணம் செய்து கொடுங்கள்.
மாப்பிள்ளை வெளிநாடு அவன் அங்கே என்ன பண்ணுறான் அவனை பற்றி விபரங்கள் அறியமால் திருமண சம்பந்தம் பேசுவீர்கள்.அவனும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து அவசரம் அவசரமாய் திருமணத்தை முடித்துவிட்டு, உங்கள் மகளை 1 வருடம் அல்லது 2 வருடத்தில் அங்கே கூப்பிடுவேன் என்று கூறிவிட்டு போயிடுவான்.
சில மாதங்கள் போன் பண்ணி கதைத்து கொண்டு இருப்பான்.நாட்கள் செல்ல செல்ல அதுவும் இருக்காது.உங்கள் மகளை வெளிநாட்டுக்கு கூப்பிடபாடுமில்லை.இதற்கு பிறகுதான் நீங்கள் அவனை பற்றி விசாரிக்க ஆரம்பிப்பிர்கள்.
விசாரித்து பார்த்தால் அவன் ஏற்கனவே திருமணம் பண்ணி வேற ஒருத்தியுடன் குடும்பம் நடத்தி கொண்டு இருப்பான்.இவ்வாறான சம்பவம் உம்மையில் நடைபெற்றுள்ளது. இதற்கு பிறகு நீங்கள் கவலைபட்டு எந்த பயனுமில்லை.
உங்கள் அவசரத்தால் மகளின் வாழ்க்கையையும் நசமாகி, நீங்களும் மற்றவர்களுக்கு முன்பாக தலைகுனிய வேண்டிய நிலையும் ஏற்படும்.
ஆகையால் அன்பான பெற்றோர்களே !
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வரன் ஒன்றை பார்ப்பீர்களானால் மணமகனை பற்றி தீரவிசாரித்து கல்யாணத்தை பண்ணுவியுங்கள்.
0 comments:
Post a Comment