டொரன்டோ & நின்னா சாரி.. உட்கார்ந்தா சாரி.. இப்படி தொட்டதுக்கெல்லாம் ‘ஐ ஆம் சாரி’ சொல்கிறவர்கள் பெண்கள் என்பது உங்கள் கருத்தா? உங்கள் கணிப்பு சரியே. இதற்கான விடையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்.
கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சூமான் தலைமையில் இதுகுறித்த 2 ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். முதல் கட்ட ஆராய்ச்சியில் 18 முதல் 44 வயது வரை உள்ள 33 மாணவர்கள் 12 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு ஆராயப்பட்டனர். இரண்டாம் கட்ட ஆராய்ச்சி 120 இளநிலை மாணவர்களிடம் நடத்தப்பட்டது. ஆய்வில் தெரியவந்த தகவல்கள்:
ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் மன்னிப்பு கேட்கிறார்கள். அவர்களிடம் காணப்படும் பொறுமையின்மையும், குழப்பமுமே இதற்கு காரணம். ஆர்வக்கோளாறு மற்றும் அவசரத்தில் பெரும்பாலான விஷயங்களில் தவறாக முடிவெடுக்கின்றனர். பின்னர் தெரிந்து கொண்டு வருத்தப்படுகின்றனர்.
அதனால்தான் பெண்களிடம் இருந்து ‘சாரி’கள் அடிக்கடி வருகின்றன. போதுமான உறக்கம் இல்லாமை, மன உளைச்சல், பதற்றம் ஆகியவைதான் தவறு செய்யக் காரணமாகிறது.
தவறுவது மனித இயல்பு. இதில் ஆண், பெண் பாகுபாடு இல்லை. பெண்கள் செய்யும் சில தவறுகளை ஆண்களும் செய்கின்றனர். ‘இதுக்கெல்லாம் சாரி கேட்க வேண்டுமா’ என்று ஆண்கள் விட்டுவிடுகிறார்கள். பெண்கள் அப்படி செய்வதில்லை. சிறிய தவறு என்றாலும் கூச்சப்படாமல் சாரி கேட்டுவிடுகிறார்கள்.
பெண்களிலும்கூட 81 சதவீதம் பேர்தான் மன்னிப்பு கேட்கின்றனர். அவரவர் குணத்துக்கு ஏற்ப மன்னிப்பு கேட்கும் பழக்கம் வேறுபடும் என்றும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
2 comments:
அட சாரி இது தானா மேட்டர்!
ஆமா ,,,ஆமா
Post a Comment