ஆப்கானிஸ்தானில் மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் அமெரிக்க, பிரிட்டன் கூட்டுப்படைகள் இப்போது, தலிபான்களை சமாளிக்க அதி பயங்கர ஆயுதம் ஒன்றை பயன்படுத்துகின்றன.
"மரண தேவதை' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆயுதம் ஒரு போர் விமானம். "ஹெர்குலஸ் ஏசி130' என்ற ரக போர் விமானம் தான் இவ்வாறு பெயரிடப் பட்டுள்ளது. வழக்கமான விமானம் போல் காட்சி யளிக்கும் இந்த விமானத்தில் இருந்து, குண்டுகளை பொழியும் போது வெளிப்படும் நெருப்பு கோளங்களை பார்க்கும் போது, மிக பயங்கரமாக காட்சி தரும்.
எனவே, இந்த விமானத்தை பறக்கும் பீரங்கி, மரண தேவதை என பிரிட்டன், அமெரிக்க படை வீரர்கள் செல்லமாக அழைக்கின்றனர். வானில் 2,000 அடி உயரத்தில் பறந்த படி இந்த விமானத்தில் இருந்து தரையில் உள்ள இலக்கை நோக்கி குண்டு வீசலாம் அல்லது வெறும் 80 அடி உயரத்தில் பறந்த படியும் குண்டு வீசலாம். அருகில் இருந்து குண்டு வீசும் போது அந்த குண்டு, மிக துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் ஒளிந்துள்ள தலிபான் தீவிரவாதிகளை இந்த விமானங்களைக் கொண்டு அமெரிக்க, பிரிட்டன் படைகள் வேட்டையாடி வருகின்றன. ஒவ்வொரு விமானத்திலும் 12 வீரர்கள் பயணம் செய்கின்றனர். இந்த விமானம் வானிலேயே தொடர்ந்து 12 மணி நேரம் பயணம் செய்யும் திறன் பெற்றது. "வானில் பறக்கும் மிகப்பெரிய பீரங்கி!' என ராணுவ நிபுணர்கள் இதை வர்ணிக்கின்றனர்.
2 comments:
Thank you for my request
(to change the color/layout) granted
ur welcome frnd,,,,,,,,,,,,,,,
users are Important to us ....
Post a Comment