பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 4ன், நான்காவது சோதனைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. இதில் பிரவுசரில் உள்ள டேப்களைக் கையாள்வதற்கு பனோரமா என்னும் டேப் நிர்வாக வசதி தரப்பட்டுள்ளது.
இதன் ஒரு சிறப்பாகும். இதன் மூலம் டேப்களில் உள்ள தளங்களைச் சிறிய காட்சிகளாகக் கண்டு, அவற்றை எளிதாகப் பயனாளர்கள் கையாள முடியும். இப்போதைய நிலையில் பயர்பாக்ஸ் பிரவுசரில், அதிகமான எண்ணிக்கையில் டேப்கள் திறக்கப்படுகையில், எதில் எந்த தளம் உள்ளது என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது. ஒரு தளத்தின் தொடர்பு தளங்கள் திறக்கப்படுகையில், அவை டேப் அளவில் ஒன்றாகவே தெரிகின்றன.
இந்த சிக்கலைத் தீர்க்க, அவற்றைக் காட்சித் தோற்றமாக இந்த புதிய வசதி காட்டுகிறது. டேப்கள் இப்போது மேக் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் உள்ள எக்ஸ்போஸ் (Expose)போலக் காட்சி அளிக்கின்றன. முன்பு இந்த வசதி டேப் கேண்டி (Tab Candy) என அழைக்கப்பட்டது. மிக அதிகமான எண்ணிக்கையில் பல்வேறு தளங்களை, டேப்கள் மூலம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
தளங்களை குழுவாகவும் பிரித்து இணைத்து வைத்துப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு டேப்பும் ஒரு சிறிய படமாகக் காட்சி அளிக்கிறது. இவற்றைக் குழுவாக ஒரு சிறிய சதுரத்தில் அடைக்கலாம். இந்த சதுரங்களையும் அவற்றில் உள்ள டேப்களையும் மாற்றிக் கொள்ளலாம். இந்த காட்சித் தோற்றத்தின் மூலம் எந்த தளம் எந்த டேப்பில் திறக்கப்பட்டுள்ளது என்பதனைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பனோரமா தோற்றத்தினை, வலது மேல் மூலையில் உள்ள பட்டனை அழுத்திப் பெறலாம்.
இது “Feedback”பட்டனுக்குச் சற்று மேலாகத் தரப்பட்டுள்ளது. இந்த வசதி இப்போது ஆப்பரா பிரவுசரில் கிடைக்கிறது. தற்போது பிரவுசர் தொகுப்பு களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டியினால், பயர்பாக்ஸ் பிரவுசரில் இந்த வசதி சற்று மேம்படுத்தலுடன் தரப்பட்டுள்ளது.
அடுத்த வசதி Firefox Sync இது முன்பு Weave என அழைக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் உங்களுடைய பாஸ்வேர்ட், புக் மார்க், ஹிஸ்டரி, படிவத்திற்கான தகவல்கள், திறக்கப்பட்டுள்ள டேப்கள், மற்றும் இவை உள்ள பட்டைகள், இணைக்கப்படும் ஐபோன் போன்ற சாதனங்கள் குறித்த தகவல் குறிப்புகளை, ஒருங்கிணைத்துப் பெறலாம். இந்த வசதி ஏற்கனவே ஓர் ஆட் ஆன் தொகுப்பு மூலம் தரப்பட்டு வந்தது. இதனைப் பலரும் விரும்பிப் பயன்படுத்தியதாலும், அதிகப் பயன் கொண்டதாக இருந்ததாலும், மொஸில்லா இதனை, பயர்பாக்ஸ் தொகுப்பின் ஓர் அங்கமாகத் தற்போது தந்துள்ளது.
ஆனால் இந்த வசதியினைப் பயன்படுத்த, உங்களுக்கு Firefox Sync அக்கவுண்ட் ஒன்று வேண்டும். அப்போது தான், உங்கள் தகவல்கள் அனைத்தையும், எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்த முடியும். இது தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் போலச் செயல்படும் வசதி ஆகும். இது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு http://www.mozilla.com/firefox/sync/ என்ற முகவரியில் உள்ள தளத்தினைப் பார்க்கவும்.
இணைய உலாவிப் பதிப்புகள் அனைத்துமே, தற்போது கண்களையும் மனதையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைக்கப்படுகின்றன. அதற்கேற்ற வகையில், ராம் மெமரி, கிராபிக்ஸ் கார்டு திறன் மற்றும் இணைந்த, இயைந்த சாதனங்கள் கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் சோதனைத் தொகுப்பு 4ன் இந்த வசதிகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கின்றன. நீங்களும் இதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்த்து மகிழலாம். உங்கள் கருத்தினை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தொகுப்பினை http://www.mozilla. com/enUS/firefox/allbeta.html/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். இந்த தொகுப்பு உலகின் 35 மொழிகளில் கிடைக்கிறது.
இந்த தொகுப்பினை http://www.mozilla. com/enUS/firefox/allbeta.html/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். இந்த தொகுப்பு உலகின் 35 மொழிகளில் கிடைக்கிறது.
0 comments:
Post a Comment