பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது "டுவென்டி-20' போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் கோலிங்வுட், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
உமர் ஆறுதல்:
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு கம்ரான் அக்மல் (6) மோசமான துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த ஹசன் (21), முகமது யூசுப் (26), பவத் ஆலம் (20) ஓரளவு ரன் சேர்த்தனர். பின்னர் பொறுப்புடன் ஆடிய உமர் அக்மல் (35*), கேப்டன் அப்ரிதி (16*) ஆறுதல் அளித்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் சுவான் 2, பிரஸ்னன், யார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கீஸ்வெட்டர் (6) சுமாரான துவக்கம் கொடுத்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்டீவ் டேவிஸ் (33) நம்பிக்கை அளித்தார். பின்னர் வந்த ரவி போப்ரா (11), கேப்டன் கோலிங்வுட் (4), லுக் ரைட் (0) ஏமாற்றினர். அடுத்து களமிறங்கிய மார்கன் (38*), மைக்கேல் யார்டி (35*) அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் அக்தர், அப்ரிதி தலா 2, உமர் குல் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக "ஆல்-ரவுண்டராக' அசத்திய இங்கிலாந்து மைக்கேல் யார்டி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை கார்டிப்பில் நடக்கிறது.
0 comments:
Post a Comment