அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

சென்னை கிங்ஸ் "சூப்பர்' வெற்றி"

Chennai celebrate the dismissal of George Worker

சாம்பியன்ஸ் லீக் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமர்க்களமாக துவக்கியுள்ளது. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பத்ரிநாத்தின் அதிரடி அரைசதம் சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று டர்பனில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் சென்னை சூப்பர் கிங்ஸ், நியூசிலாந்தின் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

ஹைடன் வீண்:
சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்'. மேசன் பந்தில் ஹைடன்(0) அவுட்டானார். அடுத்த ஓவரில் சுரேஷ் ரெய்னா(4) நடையை கட்டினார். முரளி விஜய் 19 ரன்களுக்கு வெளியேறினார். அப்போது 8.1 ஓவரில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அனிருதா அபாரம்:இதற்கு பின் தமிழக வீரர்களான பத்ரிநாத், அனிருதா ஸ்ரீகாந்த் இணைந்து அணியை மீட்டனர். மெக்லினகன் வீசிய 11வது ஓவரில் பத்ரிநாத் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். பின் பிரேஸ்வெல் ஓவரிலும் சிக்சர், பவுண்டரி பறக்க விட்டார். மறுபக்கம் தனது தந்தை ஸ்ரீகாந்த் போல அனிருதாவும் அதிரடி காட்டினார். மேசன் வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. அனிருதா 42 ரன்களுக்கு அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஆல்பி மார்கல் சிக்சர்களாக விளாசி கைகொடுத்தார். சென்னை கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அரைசதம் கடந்த பத்ரிநாத் 52(4 பவுண்டரி, 2 சிக்சர்) மற்றும் ஆல்பி மார்கல் 26 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். 
S Badrinath and Albie Morkel added 38 runs in quick time

முரளி மிரட்டல்:
சவாலான இலக்கை விரட்டிய சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணி திணறல் துவக்கம் கண்டது. மார்கல் பந்தில் இங்ராம்(6) வெளியேறினார். பாலாஜி வேகத்தில் வொர்க்கர்(4) வீழ்ந்தார். இதற்கு பின் அஷ்வின், முரளிதரன் சுழலில் விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. முரளிதரன் வீசிய 8வது ஓவரில் சின்கிளேர்(10), பார்னட்(0) அவுட்டாகினர். அஷ்வின் வலையில் ஹவ்(13), தியமந்தி(4) சிக்கினர். பிரேஸ்வெல் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இறுதியில் சென்ட்ரல் அணி 18.1 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
சென்னை அணி சார்பில் பாலாஜி அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஆட்ட நாயகன் விருதை பத்ரிநாத் தட்டிச் சென்றார்.
---------- 
மனைவி ராசி
நேற்றைய போட்டியை அரங்கில் இருந்து உற்சாகமாக கண்டு களித்தார் தோனியின் மனைவி சாக்ஷி சிங் ராவத். இவரது ராசி கைகொடுக்க, சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.
* சமீபத்தில் டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்தார் முரளிதரன். இதனை பெருமைப்படுத்தும் விதமாக, சென்னை கிங்ஸ் அணிக்காக ஆடிய முரளிதரன் தனது சட்டையின் பின்புறத்தில் 800 என்ற எண்ணுடன் விளையாடினார்.
-----------
ரன் அவுட் சர்ச்சைநேற்று 14வது ஓவரை முரளிதரன் வீசினார். முதல் பந்தை பிரேஸ்வெல் தூக்கி அடித்தார். அதனை "கேட்ச்' செய்ததும் அவுட் கோரினார். ஆனால், கிரீசுக்கு வெளியே காலை வைத்து வீசியதால், "நோ-பால்' என அம்பயர் எராஸ்மஸ் அறிவித்தார். இதனை அறியாத பிரேஸ்வெல் தான் "அவுட்' என நினைத்து பெவிலியின் நோக்கி நடக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் முரளிதரன் "பெயில்சை' தகர்த்து ரன் அவுட் கேட்டார். இதனை ஏற்க அம்பயர் மறுத்து விட்டார்.

ஸ்கோர் போர்டு

சென்னை சூப்பர் கிங்ஸ்
விஜய்(கே)சின்கிளேர்(ப)பிரேஸ்வெல் 19(29)
ஹைடன்(கே)இங்ராம்(ப)மேசன் 0(1)
ரெய்னா(கே)தியமந்தி(ப)மில்னி 4(4)
பத்ரிநாத்-அவுட் இல்லை- 52(42)
அனிருதா(கே)கிரிக்ஸ்(ப)பிரேஸ்வெல் 42(29)
மார்கல்-அவுட் இல்லை- 26(15)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 4 விக்.,) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-1(ஹைடன்), 2-5(ரெய்னா), 3-40(விஜய்), 4-113(அனிருதா).
பந்துவீச்சு: மேசன் 4-0-29-1, மில்னி 4-0-28-1, மெக்லினகன் 4-0-34-0, பிரேஸ்வெல் 4-0-28-2, வொர்க்கர் 2-0-11-0, பார்னட் 2-0-15-0.


சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ்
இங்ராம்(கே)ரெய்னா(ப)மார்கல் 6(10)
ஹவ்(ப)அஷ்வின் 13(17)
வொர்க்கர்(கே)முரளிதரன்(ப)பாலாஜி 4(4)
சின்கிளேர்(கே)ஹைடன்(ப)முரளிதரன் 10(10)
பார்னட்(கே)தோனி(ப)முரளிதரன் 0(2)
கிரிக்ஸ்(கே)தோனி(ப)போலிஞ்சர் 9(25)
தியமந்தி(ஸ்டம்)தோனி(ப)அஷ்வின் 4(6)
பிரேஸ்வெல்(ப)பாலாஜி 30(28)
மில்னி-அவுட் இல்லை- 2(3)
மேசன்(கே)போலிஞ்சர்(ப)பாலாஜி 10(4)
மெக்லினகன்(கே)ஹைடன்(ப)போலிஞ்சர் 0(1)
உதிரிகள் 6
மொத்தம்(18.1 ஓவரில் ஆல் அவுட்) 94
விக்கெட் வீழ்ச்சி: 1-12(இங்ராம்), 2-22(வொர்க்கர்), 3-35(ஹவ்), 4-36(சின்கிளேர்), 5-36(பார்னட்), 6-44(தியமந்தி), 7-82(கிரிக்ஸ்), 8-84(பிரேஸ்வெல்), 9-94(மேசன்), 10-94(மெக்லினகன்).
பந்துவீச்சு: போலிஞ்சர் 3.1-0-10-2, மார்கல் 3-0-20-1, பாலாஜி 4-1-20-3, அஷ்வின் 4-0-28-2, முரளிதரன் 4-0-15-2.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.