டாக்டருக்கான பிரதான அடையாளம் வெள்ளை கோட் மற்றும் கழுத்தில் தொங்கும் ஸ்டெதஸ்கோப். இந்த 2-வது அடையாளம் மாறப்போகிறது. அதற்கு பதிலாக ஐபோனும் கையுமாக இனி டாக்டர்களை பார்க்கலாம். இன்டர்நெட், இ&மெயில், பேக்ஸ் அனுப்பும் வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது.
இத்தகைய போன்களை மருத்துவ துறையில் பயன்படுத்துவது தொடர்பாக லண்டன் பல்கலைக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பீட்டர் பென்ட்லி தலைமையில் ஆய்வு நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
ஸ்டெதஸ்கோப்பாக பயன்படும் ஐபோனுக்கு ‘ஐ&ஸ்டெதஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன், பல்வேறு வகைகளில் பயன்படுவதால் அதில் அதிக சக்தி வாய்ந்த கேமரா, சென்சார்கள், மைக் போன்ற கருவிகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தியே நோயாளியின் இதயத் துடிப்பை துல்லியமாக கண்டறிய முடியும்.
ஐபோனை ஸ்டெதஸ்கோப்பாக பயன்படுத்துவதற்கான ‘டிரயல்’ சாப்ட்வேரை ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து இதுவரை 30 லட்சம் டாக்டர்கள் டவுன்லோடு செய்துள்ளனர். சாதாரண மக்களும் செல்போனை பயன்படுத்தியே இதயத்துடிப்பு பற்றி தெரிந்துகொள்வதற்கு ஏற்ப விரைவில் மாற்றங்கள் செய்யப்படும் என்கிறது ஆப்பிள் நிறுவனம். மருத்துவம் தொடர்பாக 6 ஆயிரம் பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன்கள் இப்போது பயன்படுகின்றன. மருத்துவ சேவைகளுக்காக மூன்றில் ஒரு பங்கு டாக்டர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர் என்றும் தகவல் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment