அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

Chennai celebrate the fall of Aaron Finch

சாம்பியன்ஸ் லீக் தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சூப்பர் ஓவர் முறையில் விக்டோரியா அணியிடம் தோல்வி அடைந்தது. முரளி விஜயின் அதிரடி ஆட்டம் வீணானது.

தென் ஆப்ரிக்காவில், 2வது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் நேற்று போர்ட் எலிசபெத்தில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா), விக்டோரியா (ஆஸ்திரேலியா) அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சென்னை கிங்ஸ் அணி கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

முரளிவிஜய் அபாரம்:
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் நல்ல துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த போது, மைக்கேல் ஹசி (25) அவுட்டானார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (10) நிலைக்கவில்லை. மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், 53 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 73 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

M Vijay made his second successive half-century

"மிடில்-ஆர்டர்' ஏமாற்றம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி (22) ஏமாற்றினார். பின்னர் களமிறங்கிய அனிருதா (2), பத்ரிநாத் (1) உள்ளிட்ட "மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.

பின்ச் அதிரடி:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய விக்டோரியா அணிக்கு, பின்ச் அதிரடி துவக்கம் கொடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை சிதறடித்த இவர், 17 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 41 ரன்கள் எடுத்து, அஷ்வின் சுழலில் சிக்கினார். மற்றொரு துவக்க வீரர் பிராட் ஹாட்ஜ் (6) ஏமாற்றினார். 

ஹசி அரைசதம்:
அடுத்து வந்த மாத்யூவ் வாடே (31) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மெக்டொனால்டு (0) வந்த வேகத்தில் நடையை கட்டினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டேவிட் ஹசி அரைசதமடித்தார். அடுத்து வந்த குய்னே (10), ஹாஸ்டிங்ஸ் (1) நிலைக்கவில்லை.

6 பந்தில் 12 ரன்:
விக்டோரியா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ரெய்னா வீசினார். இதன் முதல் பந்தில் சிக்சர் அடித்த மெக்மே (10), அடுத்த பந்தில் அவுட்டானார். பின்னர் 3வது பந்தை எதிர்கொண்ட நான்ஸ் "டக்-அவுட்' ஆனார். நான்காவது பந்தில் பீட்டர் சிடில் பவுண்டரி அடிக்க, 2 பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. 5வது பந்தில் சிடில் ஒரு ரன் எடுத்தார். 6வது பந்தில் மெக்கெய்ன் (0) ரன்-அவுட்டானார். இதனால் விக்டோரியா அணி 20 ஒவரில் 162 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆக, போட்டி "டை' ஆனது. இதனால் போட்டியின் முடிவு சூப்பர் ஒவர் முறைக்கு சென்றது.

சூப்பர் ஓவர்:
அஷ்வின் வீசிய சூப்பர் ஓவரில், விக்டோரியா அணியின் டேவிட் ஹசி மூன்று சிக்சர் உட்பட 22 ரன் எடுத்தார். பின்ச் ஒரு ரன் எடுக்க, விக்டோரியா அணி சூப்பர் ஓவரில் 23 ரன்கள் எடுத்தது. பின்னர் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி சூப்பர் ஓவரை துவக்கியது. மெக்கே வீசிய முதலிரண்டு பந்தில் ரெய்னா, முரளி விஜய் தலா ஒரு ரன் எடுத்தனர். மூன்றாவது பந்தில் ரெய்னா 2 ரன் எடுத்தார். பின்னர் 4வது பந்தில் ரெய்னா சிக்சர் அடிக்க, 2 பந்தில் 14 ரன் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் 2 ரன் எடுத்த ரெய்னா, கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதனால் விக்டோரியா அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் போர்டு

சென்னை சூப்பர் கிங்ஸ்
மைக்கேல் ஹசி (கே)பின்ச் (ப)மெக்கெய்ன்    25(28)
முரளிவிஜய் (கே)குய்னே (ப)ஹாஸ்டிங்ஸ்    73(53)
ரெய்னா (ப)மெக்கே    10(10)
தோனி (கே)டேவிட் ஹசி (ப)ஹாஸ்டிங்ஸ்    22(18)
அனிருதா (கே)வாடே (ப)மெக்கே    2(3)
கெம்ப் -அவுட் இல்லை-    12(7)
பத்ரிநாத் (கே)வாடே (ப)நான்ஸ்    1(2)
அஷ்வின் -அவுட் இல்லை-    4(2)
உதிரிகள்    13
மொத்தம் (20 ஓவரில், 6 விக்.,)    162
விக்கெட் வீழ்ச்சி: 1-68(மைக்கேல் ஹசி), 2-94(ரெய்னா), 3-135(முரளிவிஜய்), 4-141(அனிருதா), 5-146(தோனி), 6-150(பத்ரிநாத்).
பந்துவீச்சு: பீட்டர் சிடில் 3.5-0-29-0, நான்ஸ் 4-0-34-1, மெக்கே 4-0-33-2, மெக்டொனால்டு 2-0-20-0, மெக்கெய்ன் 2.1-0-18-1, ஹாஸ்டிங்ஸ் 4-0-22-2.

விக்டோரியா
பின்ச் (கே)+(ப)அஷ்வின்    41(17)
ஹாட்ஜ் (ப)போலிஞ்சர்    6(8)
வாடே (கே)தோனி (ப)முரளிதரன்    31(23)
டேவிட் ஹசி (கே)கெம்ப் (ப)போலிஞ்சர்    51(45)
மெக்டொனால்டு எல்.பி.டபிள்யு.,(ப)முரளிதரன்    0(1)
குய்னே (ப)ரெய்னா    10(13)
ஹாஸ்டிங்ஸ் (ஸ்டெம்)தோனி (ப)ரெய்னா    1(2)
மெக்கே (கே)+(ப)ரெய்னா    10(6)
சிடில் -அவுட் இல்லை-    9(3)
நான்ஸ்(கே)முரளி விஜய் (ப)ரெய்னா    0(1)
மெக்கெய்ன் -ரன் அவுட்-    0(1)
உதிரிகள்    3
மொத்தம் (20 ஓவரில், "ஆல்-அவுட்')    162
விக்கெட் வீழ்ச்சி: 1-43(பின்ச்), 2-49(ஹாட்ஜ்), 3-104(வாடே), 4-104(மெக்டொனால்டு), 5-140(குய்னே), 6-142(ஹாஸ்டிங்ஸ்), 7-146(டேவிட் ஹசி), 8-157(மெக்கே), 9-157(நான்ஸ்), 10-162(மெக்கெய்ன்).
பந்துவீச்சு: போலிஞ்சர் 4-0-40-2, அஷ்வின் 4-0-34-1, பாலாஜி 2-0-26-0, முரளிதரன் 4-0-17-2, கெம்ப் 2-0-17-0, ரெய்னா 4-0-26-4.

புள்ளிப்பட்டியல்

பிரிவு "ஏ'
அணி    போட்டி    வெற்றி    தோல்வி    புள்ளி    ரன்ரேட்
வாரியர்ஸ்    3    3    0    6    +0.975
சென்னை    3    1    0    4    +2.567
விக்டோரியா    3    2    1    4    -0.407
சென்ட்ரல்    3    0    3    0    -1.231
வயம்பா    2    0    2    0    -2.887

பிரிவு "பி'
தெற்கு ஆஸி.,    3    3    0    6    +0.529
பெங்களூரு    2    1    1    2    +1.340
மும்பை    3    1    2    2    +0.260
லயன்ஸ்    2    1    1    2    -0.050
கயானா    2    0    2    0    -2.569



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.