அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

மூளை நினைப்பதை எழுதும் கருவி



மூளை என்ன நினைக்கிறதோ அதை அப்படியே எழுத்தாக கொண்டு வரும் கருவியை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். லண்டனில் உள்ள பேச்சு ஆய்வு மைய விஞ்ஞானிகள் இந்த கருவியை உருவாக்கி உள்ளனர்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது. அதே நேரத்தில் அவர்கள் எழுதி காட்டுவதற்கு கையும் செயல்படாது. இப்படிப்பட்டவர்கள் பேச்சை எப்படி புரிந்து கொள்வது என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
 
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளையில் எலக்ட்ராட்ஸ் கொண்ட மைக்ரோ சிப்பை பொருத்தி அதை கம்ப்யூட்டரில் இணைத்தனர். மூளை வெளியிடும் சிக்னலை அந்த கம்ப்யூட்டர் எழுத்தாக மாற்ற நினைத்தனர்.
 
அது 70ல் இருந்து 90 சத வீதம் துல்லியமாக எழுத்தாக மாற்றியது ஆமாம், சூடாக இருக்கிறது, குளிராக இருக்கிறது, பசிக்கிறது, தாகம் எடுக்கிறது, ஹலோ, குட்டை, அதிகம், குறைவு போன்ற வார்த்தைகளை துல்லியமாக மாற்றியது.
 
இதன் மூலம் மூளை நினைப்பதை அனைத்தையும் எழுத்தாக மாற்றி விட முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக நவீன கருவியை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.