அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் நடந்த இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூசவுத் வேல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப்போட்டியில் 41 ரன்னில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டிரினிடாட் அணியை வென்றது.
 
2-வது சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடத்தப் படுகிறது. இந்தப்போட்டி இன்று தொடங்குகிறது. 26-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.
 
ஐ.பி.எல். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த உள்ளூர் சாம்பியன் அணிகள் இதில் பங்கேற்கின்றன.
 
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:-
 
குரூப்“ஏ”: சென்னை சூப்பர் கிங்ஸ் (ஏ1), வாரியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா ஏ2), விக் டோரியா (ஆஸ்திரேலியா), வயம்பா (இலங்கை), சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ் (நியூசிலாந்து)
 
குரூப் “பி”: மும்பை இந்தியன்ஸ் (பி1), லயன்ஸ் (தென்ஆப்பிரிக்கா பி2), சவுத்ஆஸ்திரேலியா, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்,கயானா (வெஸ்ட் இண்டீஸ்).
 
ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். “லீக்” முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
 
இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அல்விரோ பீட்டர்சன் தலைமையிலான லயன்ஸ் அணியும் மோதுகின்றன. 22-ந் தேதியுடன் “லீக்” ஆட்டம் முடிகிறது. 24 மற்றும் 25-ந்தேதிகளில் அரை இறுதியும், 26-ந்தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.
 
இந்தப்போட்டியில் டோனி, ஹைடன், மைக்கேல் ஹஸ்சி, அல்பி மார்கல், ரெய்னா (சென்னை), தெண்டுல்கர், பிராவோ, போலாட் (மும்பை), காலிஸ், ரோஸ் டெய்லர், கேமரூன் ஒயிட், உத்தப்பா (பெங்களூர்), சர்வான் (கயானா), மெக்கன்சி (லயன்ஸ்), டேவிட் ஹஸ்சி, பிரட் ஹோட்ஜே, (விக்டோரியா), மார்க் பவுச்சர், ஆஸ்வேல் பிரின்ஸ் (வாரியாஸ்) ஜெயவர்த்தனே (வயம்பா) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
 
செஞ்சூரியன், டர்பன், போர்ட் எலிசபெத், ஜோகன்ஸ்பர்க் ஆகிய 4 மைதானங்களில் போட்டி நடக்கிறது.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.