ஆக்ஸ்போர்டு டிக்ஸனரியின் அடுத்த பதிப்பு ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்பட உள்ளது. உலகளவில் புகழ்பெற்றது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் டிக்ஸனரி.
இதுதமது மூன்றாவது பதிப்பை வெளியிட உள்ளது. ஏற்கனவே தனது முதல் பதிப்பை கடந்த 1928ம் ஆண்டும், இரண்டாவது பதிப்பை 1989ம் ஆண்டும் வெளியிட்டது. அதன்பின்னர் தற்போது மூன்றாவது பதிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த முறை அதனை ஆன்லைனில் மட்டுமே வெளியிட முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக செய்திதொடர்பாளர் கூறுகையில் மாறிவரும் நவீன உலகில் தற்போது அனைத்தும் தகவல்களும் இன்டர்நெட் மூலம் பெறப்படுகிறது. ஆகையால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தனது மூன்றாவது பதிப்பு டிக்ஸனரியை ஆன்லைனில் வெளியிட உள்ளது. இதற்கான இணையதளம் www.oed.com ஆகும்.
மேலும் பல புதிய தகவல்களுடன் புதிய இணையதளம் தயாராகி வருகிறது. அதனை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஆன்லைன் தேவைகள் நிறைய இருந்தாலும் அச்சுவடிவிலான தேவைகளும் அதிமாக உள்ளது. அச்சுபதிப்பு குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment