ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி டேர்டெவிலன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
முதலாவது ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2-வது போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், 3-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றன.
4-வது ஐ.பி.எல். போட்டி இந்த ஆண்டு நடக்கிறது. இதில் கூடுதலாக கொச்சி, புனே அணிகள் பங்கேற்கின்றன. 10 அணிகள் பங்கேற்ப தால் 4-வது ஐ.பி.எல். போட்டிக்கான அமைப்பு முறையை மாற்றி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
10 அணிகளும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. கடந்த ஐ.பி.எல். போட்டியில் நடந்த முறை கேடு தொடர்பாக விசா ரணை நடத்தப்பட்டது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் அன்னிய செலவாணி மோசடி செய்ததாக இரு அணிகளுமே தற்போது அமலாக்க பிரிவு விசாரணையில் உள்ளது.
இதில் இரு அணிகளும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது நிரூபணமானது. அந்த இரு அணிகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டியில் இருந்து நீக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது
இதில் இரு அணிகளும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது நிரூபணமானது. அந்த இரு அணிகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டியில் இருந்து நீக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது
0 comments:
Post a Comment