கூகுள் ' குரோம் ' இயங்குதளம் தனது 2ஆவது பூர்த்தியை நேற்றுக் கொண்டாடியது. இந்நிலையில் அது ' குரோம் 6 ' என்ற மேம்படுத்தப்பட்ட புதிய தொகுப்பினை நேற்று வெளியிட்டுள்ளது.
தற்போதைய அறிக்கைகளின்படி, இயங்குதள சந்தையின் பிரகாரம் அதன் பங்கு 7.5 வீதமாகும்.
அதன் போட்டியாளரான 'இன்டர் நெட் எக்ஸ்புளோரர்' மற்றும் 'மொஸிலா பயர்பொக்ஸ்' என்பன முறையே 60.4% மற்றும் 22.9% இயங்குதள சந்தையைக் கொண்டுள்ளன.
கூகுள் குரோமின் முன்னைய தொகுப்பானது சுமார் 15 முக்கிய பாதுகாப்பு குறைபாடுகளினை கொண்டதாகக் காணப்பட்டது.
ஆனால் தற்போதைய ' குரோம் 6 ' தொகுப்பானது அக்குறைபாடுகள் அற்றதெனவும் நன்கு மேம்படுத்தப்பட்டதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது முன்னைய தொகுப்பினை விட 6 மடங்கு வேகமாக இயங்கக்கூடியதுடன் மேம்படுத்தப்பட்ட 'யூஸர் இன்டர் பேஸ்'ஸினையும் கொண்டதாகும்.
இது 'ப்ளேஸ் ஐ' கொண்ட நிலையிலேயே கிடைக்கப் பெறுகின்றமை மற்றும் எச்டிஎம்ல் 5 வசதிகளைக் கொண்டுள்ளமை விசேட அம்சங்களாகும்.
மேலும் இலகுவான பாவனைக்காக 'புக்மார்க்ஸ்' பட்டன்கள் இயங்குதளத்தின் புதியதொரு இடத்தில் தரப்பட்டுள்ளன.
மேற்படி இயங்குதளத்தினை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.
7 comments:
நல்ல தகவல்.... இன்டலி வாக்குப்பட்டை இரண்டு இருக்கு.. ஒன்றை எடுத்து விடலாமே...
நல்ல தகவல்.நான் கூகுள் குரோம்தான் பயன்படுத்துகிறேன்.அது தானாகவே update செய்துகொள்ளுமா அல்லது நான் புதிதாக தரவிரக்க வேண்டுமா?
முயற்சி செய்கிறேன் முகமட்
நீங்கள் புதிதாக தரைவிரக்கி பயன்படுத்தினால் நன்று என்று நினைக்கிறேன்...
புதிதாக தரவிரக்கத்தேவையில்லை.
வலப்பக்கத்தில் இறுதியாக உள்ள (சாவி வடிவில் குறிப்பிட்டுள்ள)customize and control Google Chrome buttonஐ கிளிக் பண்ணி About Google Chrome என்பதைத் தெரிவு செய்தால்,தானாகவே உங்கள் பதிப்பை பரிசோதிக்கும்.பதிப்பு பழசெனில் இன்ஸ்டால் பண்ண அனுமதி கேட்கும்.
அழித்து மீண்டும் நிறுவும் போது book mark,add-ons ஐ இழக்க நேரிடும்.
நன்றி மல்குடி உங்கள் தகவலுக்கு........
நன்றி மால்குடி.
நீங்கள் குறிப்பிட்டபடி செய்து பார்க்கிறேன்.
update ஆகிவிட்டது.நன்றி
Post a Comment