மிக நுண்ணிய உயிரினங்களை கண்டறிய மைக் ராஸ்கோப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அணுவை கூட கண்டறியும் வகையில் சக்தி வாய்ந்த மைக்ராஸ் கோப்பை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச் சியாளர்கள் இந்த புதிய எலெக்ட்ரான் மைக்ராஸ் கோப்பை தயாரித்துள்ளனர்.
தனித்தன்மை வாய்ந்த இந்த மைக்ராஸ் கோப்புக்கு “எப்.இ.ஐ. டைடான் 3 எலெக்ட்ரான் மைக்ராஸ் கோப்” என பெயரிட்டுள் ளனர். இதன் மூலம் எந்த வித அணுவையும் கண்டுபிடித்து அதை பிரித்தெடுக்க முடியும்.
மிக சிறியதான கார்பன் அணுவையும் கண்டறிந்து பிரித்தெடுக்க முடியும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மனித உரோமத்தை விட 10 லட்சம் மடங்கு மிக சிறியதாக உள்ள அணுவையும் பிரித்தெடுக்க இயலும்.
இந்த மைக்ராஸ் கோப் மூலம் அல்சமீர்ஸ், பர்கின்சன்ஸ் போன்ற வினோத நோய்களை கண்டறிவதற்கான சோத னையிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த மைக்ராஸ் கோப் மூலம் எதிர்கால தலைமுறையினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பயன் படுத்தக்கூடிய விளக்குகளை கண்டு பிடிக்கவும் முயன்று வருகின்றனர்.
இந்த விளக்குகள் கார்பனை குறைந்த அளவில் வெளியிடும் சக்தி கொண்டவை
4 comments:
நல்ல தகவல்
நன்றி வேலு....
நல்ல தகவல்....இதை கொடுத்ததற்கு நன்றி..
நன்றி கணேஷ் ...........
Post a Comment