சிறந்த பாதுகாப்புக்களுடன் கூடிய உட்புற கட்டுமானங்களை பிரபலிக்கும் ஐங்கோண வடிவில் அமைந்த யாழ் கோட்டை பாதுகாப்பு அகழி, சாய்வு கொண்ட பாதுகாப்பு அரண், மூடிய வாயில்கள் என அதன் வெளிப்புற பாதுகாப்பு வேலைப்பாடுகளுக்கும் இலங்கையில் எஞ்சியுள்ள ஒரு சிறந்த வரலாற்று தடையமாகும்.
போர்த்துக்கீசரால் 1619 இல் அமைக்க்பட்ட இக் கோட்டை பின்னர் டச்சுகாரர்களால் தமது வர்த்தகத்தினை இலகுபடுத்தும் நோக்கில் 17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் மீள கட்டியமைக்க்பட்டதுடன் விரிவாக்கமும் செய்யப்பட்டது. யாழ் குடாநாட்டின் ...தெற்காக குடா கடல் நீரேரியை அண்டி அமைந்திருக்கிறது யாழ் கோட்டை. இலங்கையின் இரண்டாவது எஞ்சியுள்ள பெரிய கோட்டை என்ற பெருமையும் இதற்கு உண்டு.
முனைவு முகப்புக்களுடன் கூடிய வேலைத்திட்டங்களுடன் அமைந்த ஐந்து பக்க சுவர்கள், வலுவான பாதுகாப்புடன் கோட்டையை சூழவும் அகன்ற ஆழமான அகழி என சிறந்த பாதுகாப்பு வேலைப்பாடுகளால் உருவாக்க்பட்டிருக்கின்றது.
ஐங்கோண வடிவமைப்பில் அமைந்த கோட்டையின் பாதுகாப்பு அரணாக அமைந்த ஒவ்வொரு பக்க சுவர்களிலும் முனைவுச் சேர்ப்பில் அமைந்து பாதுகாப்பு வேலைப்பாடுகள் உண்டு. இவ்வாறு அமைக்க்பட்ட பாதுகாப்பு சுவர்களுக்கு மேலும் பலம் சேர்க்கும் வேலைப்பாடாக சுவர்களின் வெளியே கோட்டையை சூழ்ந்து செல்கிறது பாதுகாப்பு அகழி.
கோட்டையின் வெளிப்புரம் சரிவுடன் கூடிய சுவர்கள், காவல் அரண்கள் மற்றும் மூடிய நுழைவாயில்கள் என்பன வெளிப்புற பாதுகாப்பின் உச்ச வேலைப்பாடுகள் எனலாம். இலங்கையின் காலி, கொழும்பு நகரங்களை பலப்படுத்துவதற்காக அப்பிரதேசங்களில் அமைக்க்பட்ட கோட்டைகளை போல் அல்லாது சிறப்பான நிர்வாக, இராணுவ தேவைகளுக்காக யாழ் கோட்டை டச்சுக்காரர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
பிரிட்டனின் ஆட்லறி தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிக்கும் அளவிற்கு அதன் பாதுகாப்பு வேலைப்பாடுகள் வடிவமைக்க்பட்டிருந்தது “கிழக்கின் சிறந்த, அதி நவீன வேலைத்திட்டங்களுடன் கூடிய கோட்டை ஒன்றாக இதனை டச்சுக்காரர்கள் கட்டிமுடித்தார்கள்” என்கிறார் நெல்சன் தனது “இலங்கையில் டச்சுக்காரர்களின் கோட்டைகள்” என்ற நூலில். ஏனைய இந்து சமுத்திர நாடுகளில் அமைக்க்பட்ட டச்சுக்கால கோட்டைகளுக்கு இது எந்தவிதத்திலும் குறைந்ததல்ல எனப்படுகின்றது. யாழ் கோட்டையின் உட்புற கட்டிட வேலைப்பாடுகள் அதி உன்னத கட்டிடக்கலையின் வெளிப்பாடுகளாக திகழ்கின்றன.
அதன் சுற்றுப்புற சுவர்களுக்கு உள்ளே 1706 இல் எழுப்ப்பட்டதாக கருதப்படும் தேவாலையம் வடபுலத்தின் பிரமிப்பான டச்சு கட்டிடகலையின் சிறந்த அம்சம் எனப்படுகின்றது. ஆனால் பிற்பட்ட காலங்களில் நிலவிய நாட்டின் யுத்த சூழல் காரணமாக இன்று இதன் பெருமளவான பாகங்கள் சிதைந்துவிட்டன. எறிகணைத்தாக்குதல்களால் சிதைந்த சுவர்கள் போக எஞ்சிய கோட்டையின் வனப்பினை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைக்கு வரவிருப்பதாக தெரிவிக்க்படுகின்றது.
1 comments:
அது ஒரு கனாக்காலம்
Post a Comment