உலகம் எங்கும் உள்ள தமிழர்கள், ஆன்லைனில் இலவசமாக தமிழ் கற்றுக்கொள்ள, அமெரிக்க விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
7 வயது முதல் 18 வயது வரையானவர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த ஆன் லைன் வகுப்பில் சேரலாம். வாரம் ஒருமுறை இந்த வகுப்புகள் நடைபெறும்; வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்த நாளில் ஏதாவது ஒரு நாளைத் தேர்வு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலமாக இல்லாமல் நேரிடையாக கலந்துரையாடல் முறையில் இது நடத்தப்படுகிறது. அமெரிக்க நேரப்படி மாலை 07:30, இரவு 08:30, 09:30 மற்றும் 10:30 மணிக்கு இந்த வகுப்புகள் துவங்கும். ஆடியோ, வீடியோ, உரையாடல் மற்றும் பதிவு செய்து கொள்ளும் வசதிகளும் வழங்கப்படும். இன்டர்நெட் இணைப்பு, மைக் மற்றும் வெப் காமிரா வசதி செய்து கொள்ள வேண்டும். அனுபவம் உள்ள தமிழ் ஆசிரியர்களால் இது நடத்தப்படுகிறது. இந்த வசதியைப் பெற
இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளவும்.
3 comments:
well i lilke
ahh Thnk u
பாஸ் கூகுள் பிளஸ் பட்டனை இணையுங்கள் ...
நன்றி ......
Post a Comment