அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் கிடைக்கும் ஒரு தொகுப்பு மிகப் பயனுள்ள வகையில் பல பராமரிப்பு பணிகளை, எளிதாக மேற்கொள்கிறது. 

இதனை இயக்க, நமக்கு தொழில் நுட்ப உத்திகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இதன் பெயர் ஸ்லிம் கிளீனர் (Slim Cleaner).  இதன் சோதனைத் தொகுப்பு தான் இப்போது வந்துள்ளது. இருப்பினும் செயல்பாட்டில் எந்த குறையும் இல்லாமல் இது பயனுள்ள முறையில் இயங்குகிறது.

இந்த வகையில் ஏற்கனவே பலருக்குத் தெரிந்த தொகுப்பான CCleaner  போலவே இந்த புரோகிராமும் செயல்படுகிறது. சுத்தப்படுத்துவதற்கென நீக்கப்படும் டேட்டாவினை  Windows, Applications  மற்றும்  Browsers  என்ற மூன்று பிரிவுகளில் காட்டுகிறது. இந்த டேப்கள் மேலும் சில பிரிவுகளாக (Windows History, Productivity  மற்றும் FileSharing)  அமைக்கப் படுகின்றன.
  


ஒவ்வொரு பிரிவிலும் ஒரே புரோகிராமில் உள்ள தேவையற்ற டூப்ளிகேட் டேட்டாக்கள் காட்டப்பட்டு நீக்கப்படுகின்றன.  Analyze என்ற பட்டனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் சிஸ்டம் முழுமையாக ஸ்கேன் செய்யப்படுகிறது. இறுதியில் ஒவ்வொரு புரோகிராம் பிரிவிலும், நீக்கப்பட வேண்டிய டேட்டா காட்டப்படுகிறது.  

இப்படி ஒவ்வொரு பிரிவிலும் டேட்டாவினைப் பார்த்திடாமல், நேரடியாகவே அனைத்து வேண்டாத டேட்டாக்களையும் நீக்கும் வழியும் உள்ளது.  இதில்Services  உள்ள டேப்பில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து சேவை வசதிகளும் பட்டியலிடப்பட்டு, அவை அப்போது எந்த நிலையில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று காட்டும். புரோகிராமின்restore   டேப், நாம் தேவையில்லாமல் ஏற்படுத்திய மாறுதல்களை நீக்கி, அவற்றிற்கு முன் கம்ப்யூட்டர் இருந்த நிலைக்குக் கொண்டு செல்லும். 

இதில் உள்ள uninstaller  புரோகிராம், கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள புரோகிராம்களை, முழுமையாக எந்த மிச்ச பைலும் இன்றி நீக்குகிறது. அதே போல இதில் தரப்படும்  file shredderவசதி, ஒரு பைலை, மீண்டும் யாரும் எடுக்க முடியாதவகையில், அழிக்கிறது. Windows Tools  என்னும் வசதி, விண்டோஸ் கண்ட்ரோல் பேனல் மற்றும் சிஸ்டம் தரும் வசதிகளைத் தருகிறது. அந்த சிஸ்டம் பிரிவுகளில் பார்க்கும் அனைத்து வேலைகளையும் இதன் மூலமும் மேற்கொள்ளலாம்.  

இந்த புரோகிராமினை http://slimcleaner.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக, டவுண்லோட் செய்திடலாம்.

Post Comment


2 comments:

S.முத்துவேல் said...

மிக அருமை..

டிலீப் said...

நன்றி முத்துவேல்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.