சிக்கலிலும் சிக்கல் நிறைந்த ஆண்டாக சிக்கியிருக்கின்றது 2012. நவீன மனித சமூகத்தின் இறுதியாண்டு 2012 என்ற கருத்துக்கள் இன்று பரவலாக பேசப்படுகின்றன. அதில் இரண்டு முக்கியமான விடையங்கள் உள்ளன. ஒன்று மாயன் நாட்காட்டியின் எதிர்வு கூறல், மற்றையது நிபுரு என்ற 12 வது கிரகத்தின் வருகை என்பதாகும்.
பன்னிரண்டாவது கோள் என குறிப்பிடப்படும் நிபுரு அல்லது கோள்-எக்ஸ் தொடர்பான கருத்துக்களினையும் அது எவ்வாறு 2012 உடன்
தொடர்புபடுத்தப்படுகின்றது எனவும் தொடர்ந்து பார்ப்போம். நிபுரு...
எமது சூரியத்தொகுதியின் மிகவும் செய்மையில் உள்ள கோள் எனப்படுகின்றது. இந்த நிபுருவினை ஆதி எகிப்திய மக்கள் “குறுக்கிடும் பிரகாசமான நட்சத்திரம்” என அழைத்திருக்கின்றனர்.
அது எமது சூரியனை வலம்வருவதற்கு 3600 வருடங்கள் எடுக்கின்றதாம். நிபுரு என்ற சொல் ஆதி மனித சமூகமாகிய சுமேரியர்களின் கல்வெட்டு எழுத்துக்களில் இருந்து உருவாகியதாக தெரிகின்றது. நிபுரு வித்தியாசமான மனித சமூகத்தை கொண்ட ஒரு கிரகம் என்கின்றனர் சிலர். நிபுரு புவியினை காட்டிலும் மூன்று மடங்கு பெரிய கிரகம் என்கின்றனர் சிலர்.
எனினும் சிலர் அதனை ஒரு போர் நச்சத்திரம் என்றும் அழைக்கின்றனர். இருண்ட அல்லது இறந்த நச்சத்திரம் என்பது நிபுருவுக்கு உள்ள பொதுவான விளக்கமாகும். பன்னிரண்டாவது கோள் என குறிப்பிடப்படும் நிபுரு அல்லது கோள் -எக்ஸ் தொடர்பான கருத்துக்களினையும் அது எவ்வாறு 2012 உடன் தொடர்புபடுத்தப்படுகின்றது எனவும் தொடர்ந்து பார்ப்போம்.
[நிபுரு என்ற கிரகம் ஒன்றே இல்லை அது வெறும் பொய் கற்பனைகளே என்பது விஞ்ஞானிகளின் விடை என்பதை கருத்தில் கொள்க. நாம் இப்போது பார்க்க இருப்பது இன்று நிபுரு என்ற ஒரு கருத்து எப்படி தோன்றியிருக்கின்றது என்பது பற்றியே]
1970 மற்றும் 1980 களில் நிபுரு தொடர்பாக அதிகமாக பேசப்பட்டது. நெப்யூன் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் அது நிபுரு ஆகவே ஆரம்பத்தில் கருதப்பட்டது எனினும் பின்னர் புளுட்டோ நிபுருவாக கருதப்பட்டது
எனவே இதுவெல்லாம் வெறும் கற்பனை என்கின்றனர் பலர். அவை அப்படி இருக்க சுமேரியர்களின் நிபுரு தொடர்பான நம்பிக்கைகளை புறந்தள்ளுவதற்கு உலகின் ஒரு பகுதி மக்கள் மறுக்கின்றனர்.
ஈராக்கின் யூப்பிடீஸ் தைக்கிரடீஸ் நதிப்பள்ளத்தாக்குகளில் வாழ்ந்த ஒரு மனித சமூகமே சுமேரியர் எனப்படுகின்றது இப்பள்ளத்தாக்குகள் விவசாயத்திற்கு உகந்த நிலங்களாக விளங்கியதுடன் அதிகளவான வளங்களையும் அன்றைய காலத்தில் கொண்டிருந்தன. சுமேரியர்களின் கல்வெட்டுக்கள் பல எமது விண்மீன் மன்டலத்தின் நேர்த்தியான வரைபடங்களை கொண்டு காணப்படுகின்றன.
ஒவ்வொரு கிரகங்களும் ஏறக்குறைய சரியான முறையில்
அமைக்கப்பட்டிருந்தன. தொலைக்காட்டிகள் எதுவுமற்ற அந்த காலத்தில் இவை அனைத்தையும் இந்தச் சமூகத்தவர்கள் எப்படிப் அறிந்து கொண்டார்கள்..? மிகவும் இலகுவான விடை ஒன்று கிடைக்கின்றது.
சுமேரியர்களின் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
வேற்று கிரகவாசிகளான இறைவனிடம் இருந்து அனுப்பப்பட்ட அனுசக்கி என அழைக்கப்படும் ஆதி இனம் ஒன்றிடம் இருந்தே இவை கிடைத்தன என்கின்றது அக்கல் வெட்டுக்கள். புவியில் ஆதி உயிரினங்கள் உருவாகத்தொடங்கி பில்லியன் ஆண்டுகளின் பின்னர் இங்கு வந்த அனுசக்கி என அழைக்கப்படும் இவ் வேற்றுகிரக வாசிகள் பற்றி சுமேரியரின் கல்வெட்டுக்கள் அதிகமாக கூறுகின்றன.
இவ் அனுசக்கிகள் வாழ்ந்த கிரகமாக நிபுரு குறிப்பிடப்படுகின்றது. இந்த கிரகம் எமது சூரியத்தொகுதியிலேயே பெரிய கிரகம் என குறிப்பிடப்படுவதுடன் அது 2003 ஒக்டோபரில் வானில் சிறிய நட்சத்திரமாக அவதானிக்கப்பட்டதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் 2012 டிசம்பர் மாதம் அது புவியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகில் வரவுள்ளதாகவும் பொதுவாக வானில் இரண்டாவது சந்திரன் போன்று தோன்றும் எனவும் இன்று பலர் கூறிவருகின்றனர்.
அந்தவேளையில் புவியில் பாரிய இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அழிவுகள் என்பன அரங்கேறும் எனப்படுகின்றது. இதனை அடியொட்டியதாகவே மாயன் சமூகத்தின் சுழற்றி நிகழ்வுகளின் நாட்காட்டியும் 2012 டிசம்பரில் நிறைவடைவதாக பலரும் கூறிவருகின்றனர்.
இவை தொடர்பான விடையங்களை முற்றாக மறுக்கின்றனர் விண்வெளி அறிஞ்ஞர்கள். நிபுரு அல்லது கோள் எக்ஸ் என்பது வெறும் கட்டுக்கதைகளே என குறிப்பிடும் நாசா இவை சில வர்த்தகர்களின் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்கள் எனவும் குறிப்பிடுகின்றது.
எப்படியேனு சிக்கல்களிலும் சிக்கல் நிறைந்த ஆண்டாக 2012 சிக்கியுள்ளது என்பது மட்டும் உண்மை. சில வேளைகளில் எமது மூதாதையரின் கணிப்பீடுகள் உண்மையாகலாம். இல்லையேல் இவை பொய்ப்பிக்கப்படலாம். இவை அணைத்தும் நாம் 2012 வரை பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடையங்களே.
0 comments:
Post a Comment