ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 478 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 495 ரன் குவித்து பதிலடி கொடுத்தது. தெண்டுல்கர் இரட்டை சதமும் (214 ரன்). முரளி விஜய் சதமும் (139 ரன்) அடித்தனர்.
17 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா இந்திய பந்துவீச்சில் திணறியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து இருந்தது. ஜான்சன் 7 ரன்னுடனும், ஹவுரிட்ஸ் 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணி 75.2 ஓவரில் 223 ரன்னில் `ஆல் அவுட்' ஆனது. கேப்டன் பாண்டிங் அதிகபட்சமாக 72 ரன் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜாகீர்கான், ஒஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
2-வது விக்கெட்டுக்கு விஜய்யுடன், புதுமுக வீரர் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினார்கள். மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன் எடுத்து இருந்தது. இருவரும் தலா 29 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மதிய உணவு இடை வேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடினார்கள். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த விஜய் 37 ரன் எடுத்து இருந்த போது வாட்சன் பந்தில் எல்பி.டபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன் என்ற நிலையில் இருந்தது.
இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா அணிக்கு எனது வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment