
என்ன தலைப்புக்கும் போட்டோக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்குதே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியுது.இது ரப்பிக்கை அதிகரிப்பதற்கான டெக்னிக்.
இன்று ஆஸ்திரேலியா பேர்த் மைதானத்தில் இலங்கை ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற டி-டுவென்டி போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
இப்போழுது உங்களுக்கு ஏன் இவ் தலைப்பை இட்டுள்ளேன் என்று விளங்கி இருக்குமென்று நினைக்கின்றேன்.
நாணய சூழற்சி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பட் பண்ண தீர்மானித்தது.ஆரம்ப துடுப்படுத்தாட வந்த வோனர் கிளார்க் வந்து வேகத்திலேயே பிவிலியன் திரும்பினர்.கிளார்க்கின் ஆட்டமிழப்பு பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.தில்கார பெர்ணான்டோ ஒரு கையினால் மிகவும் கடினமான பிடி எடுப்பை எடுத்தார்.

அதன் பிறகு வந்த பேட்ஸ்மென்கள் இலங்கை அணியின் நேர்த்தியும் துல்லியுமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியமால் வந்த வேகத்தில் பிவிலியன் திரும்பினர்.ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 43 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ஹட்டின் ஸ்மித் மிகவும் அருமையாக தங்களது திறமைகளை வெளிகாட்டி ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.இறுதியில் ஆஸ்திரேலியா அணி 133 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது.
சங்கக்காரவின் திறமையான தலைமைத்துவத்தை பற்றி கூறியேயாக வேண்டும்.நிர்த்தியான கள தடுப்பு வியூகம் மற்றும் தகுந்த நேரங்களில் பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி சங்கக்கார பாவித்தமை ஆஸ்திரேலியா அணியின் ஓட்டங்கள் குறைய காரணமாக அமைந்தது.

134 எடுத்தால் வெற்றியென்ற இலக்கை நோக்கி துடுப்பாடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் தொட்டே மஹேல அதிரடியாகவும் டில்ஷான் நிதானமாவும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கை அணி 42க்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் டில்ஷானுடன் ஜோடி சேர்ந்த அணி தலைவர் சங்கக்கார சிறந்த இணைப்பாட்டங்களை வெளிப்படுத்தி இலங்கை அணியின் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தனர்.டில்ஷான் 41 ஓட்டங்களையும் சங்கக்கார ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
பெரேராவின் இரண்டு மெகா சிக்ஸருடன் இலங்கை அணி வெற்றியை தனதாக்கி கொண்டது.
25 ரன்களுக்கு 3 விக்கெட்களை எடுத்து சிறந்ந பந்துவீச்சினை வெளிப்படுத்திய ரந்திவ் ஆட்ட நாயகனாக விருது பெற்றார்.

இரு நாடுகளுக்கிடையே முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி வரும் புதன்கிழமை மெல்பேர்ன் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
3 comments:
//ers said...
உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
சிங்கத்தின் பசிக்கு இரையான கங்காரு????????????????????
//sivatharisan said...
சிங்கத்தின் பசிக்கு இரையான கங்காரு???????????????????//
நண்பா... சிங்கம் இலங்கை அணி
கங்காரு அவுஸ்திரேலியா அணி
Post a Comment