சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தற்காலத்தில் அதிகமாக இடம் பெறுவதால் அதை பற்றி பதிவை எழுதலாம் என்று நினைக்கிறேன்.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பல்வேறு வகையிலும் இடம் பெறுகிறது.பாலியியல் கடத்தல் கப்பம் பெறுதல் மற்றும் சிறுவயதில் வேலைக்கு அமர்த்துதல் மூலமாக இடம் பெறுகின்றது.
சிறுவர்களுக்கான அமைப்புக்கள் பல இருந்தாலும் அதன் செயற்பாடுகள் மந்தகதியில் இடம் பெறுகின்றமை கவலைக்குரிய விடயம்.
சமீபத்தில் நான் பத்திரிக்கை இணையங்களில் படித்த சம்பவங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.
ஒரு சில நிமிட காமபசிக்கு எனக்கு வயது ஞாபகமில்லை 45 50 வயதாக இருக்கும் என்று நினைக்கின்றேன் பெற்றோர் பிள்ளையை அவர்களின் வேலையின் நிமித்தம் வீட்டில் தனியாக விட்டுவி;ட்டு சென்றவேளை வீட்டுக்கு பக்கத்திலிருந்த அந்த காமகன் அந்த சிறுமியை தனது காம பசிக்கு இரையாக்கி விட்டு அதை மறைப்பதற்காக ஒரு பையில் போட்டு ஓடையில் வீசி விட்டு சென்றுள்ளான்.
அதே போலவே நான் வசிக்குமிடத்திலும் இவ்வாறன விசித்திர சம்பவமொன்று இடம் பெற்றது. மரண வீட்டுக்கு பெற்றோருடன் வந்த 16 வயது சிறுமி;க்கு பாலியல் வன்முறை இடம் பெற்றது.
மரண வீட்டு காரியங்கள் முடிவடைந்ததும் மற்றவர்களுடன் உறங்கி கொண்டு இருக்கையில் அதே மரண வீட்டுக்கு வந்த நபர் அவளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளான்.இதில் கவலைக்குரிய விடயம் இது நடக்கையில் இதை பற்றி கூட இருந்தவர்கள் அறியாமல் இருந்தமை.
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நிறைய பேர் செய்யும் தொழில் கடத்தல் கப்பம் பெறல்.
நேற்று இந்தியாவில் இடம் பெற்ற சம்பவம்
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தற்பொழுது அதிகளவு குறைந்து உள்ளது என்றே நான் கருதுகின்றேன்.நாட்டில் அமுல்படுத்தி இருக்கும் கடுமையான சட்டங்களே காரணமாகவே.
அன்பான பெற்றோருக்கு நான் கூற விரும்புவது உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு உங்கள் கையிலே உள்ளது.நீங்கள் கடினமாக உழைப்பது பிள்ளைகளின் சிறந்த எதிர்கால வாழ்க்கைகே ஆகும்.ஆனால் நீங்கள் வேலை வேலையென்று பிள்ளைகளை கவனியாமல் விட்டால் மேலே குறிப்பிட்ட சம்பவங்களே இடம் பெறும்.
ஆகையால் நீங்கள் வேலையை விட பிள்ளைகளை கவனிப்பதில் அதிக நேரத்தை செலவழியுங்கள்.
எங்கு சென்றாலும் பிள்ளைகளை உங்களுடன் அழைத்து செல்லுங்கள்.இது கடினமான விடயமென்று நான் அறிவேன் ஆனால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியமென்றால் இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும்
2 comments:
மாப்பிளே இவங்க திருந்த மாட்டாங்கடா...
//ம.தி.சுதா said...
மாப்பிளே இவங்க திருந்த மாட்டாங்கடா.//
ஆமா மாப்பு எப்ப தான் இந்த சனம் திருந்த போகுதலோ....
Post a Comment