உலகில் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி அழிந்து வரும் நேரத்தில் இந்தியாவில் ஒருபுதுமையான மொழி பேசுவோர் கிடைத்திருப்பது மொழியியல் ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோரோ மொழி பேசுவார் சுமார்800 முதல் 1200 வரை மட்டுமே உள்ளனர் என நேஷனல் ஜியோகிராபிகல் சேனல் குழுவின் தலைவர் கிரிகோரி ஆண்டர்சென், டேவிட்ஹாரிசன், ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டிடிலிருந்து நடத்தி வந்த ஆராய்ச்சியில் இதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் இந்த கோரோ வகை மொழி திபெத்தோ பர்மன் குடும்பத்தை சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளனர். திபெத்தோ பர்மன் மொழியில் 400 வகைகள் இருந்தாலும் கோரோ மொழி வித்தியாசமானதாக உள்ளது.
இந்த மொழியில் ஏராளமான உயிர் எழுத்துக்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2008-ம் ஆண்டு அருணாசல பிரதேச மாநிலத்தில் கோரோ பேசுவோர் குறித்து அகா, மிஜி என்ற குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய மொழிகளில் பட்டியலிடப்படாத மொழிகளில் ஒன்றாக கோரோ மொழி உள்ளது.
2 comments:
நல்ல தகவல்
நன்றி ராவணா
Post a Comment