அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


Virat Kohli heads back after his century

விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராத் கோஹ்லி விஸ்வரூபம் எடுத்தார். இவரது "சூப்பர்' சதம் கைகொடுக்க, இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் சதம் வீணானது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கிறது. கொச்சியில் நடக்க இருந்த முதல் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்தது.


புதுமுகம் அறிமுகம்:"டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார். இந்தியா சார்பில் ஷிகர் தவான், சவுரப் திவாரியும், ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸ்டிங்ஸ், ஸ்டார்க் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர்.

ஹசி அபாரம்:
ஆஸ்திரேலிய அணி மோசமான துவக்கம் கண்டது. நெஹ்ராவின் வேகத்தில் மார்ஷ்(0), பெய்னே(9) வெளியேறினர். இதற்கு பின் கேப்டன் மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹசி இணைந்து அணியை மீட்டனர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. இவர்களை பிரிக்க, கேப்டன் தோனி எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய ஹசி, சர்வதேச ஒருநாள் அரங்கில் 32வது அரைசதத்தை எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்த நிலையில் அஷ்வின் சுழலில், ஹசி (69) வீழ்ந்தார்.

Michael Hussey acknowledges the cheers on reaching fifty
கிளார்க் சதம்:மறுமுனையில் கேப்டனுக்குரிய முறையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கிளார்க். அபார ஆட்டத்தை தொடர்ந்த இவர், வினய் குமார் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசி, சர்வதேச அரங்கில் ஐந்தாவது சதம் கடந்தார். இந்தியாவுக்கு எதிராக இது இரண்டாவது சதம்.

ஒயிட் மிரட்டல்:
கடைசி கட்டத்தில் கிளார்க்குடன் இணைந்த காமிரான் ஒயிட் அதிரடியாக ரன் சேர்த்தார். வினய் குமார், நெஹ்ரா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த இவர், பிரவீண் குமாரையும் விட்டு வைக்கவில்லை. இவர் பவுலிங்கில் இரண்டு சிக்சர்கள் அடித்து மிரட்டினார். வினய் குமார் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ஒயிட், 11வது அரைசதம் கடந்தார்.

5 ஓவரில் 84 ரன்:
ஆஸ்திரேலிய அணி கடைசி 5 ஓவரில் மட்டும் 84 ரன்கள் விளாச, 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் குவித்தது. 49 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்த ஒயிட், கிளார்க் (111) அவுட்டாகாமல் இருந்தனர்.

தவான் ஏமாற்றம்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்தில் திணறியது. மெக்கே வேகத்தில் தவான்(0), முரளி விஜய்(15) வெளியேறினர். இதற்கு பின் யுவராஜ் சிங், விராத் கோஹ்லி இணைந்து கலக்கினர். வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடிய யுவராஜ் 87 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

ரெய்னா அதிரடி:அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆடினார். ஹோப்ஸ் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார். தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த விராத் கோஹ்லி, ஒரு நாள் அரங்கில் 3வது சதம் அடித்தார். காலில் ஏற்பட்ட தசை பிடிப்பால் அவதிப்பட்ட இவருக்கு "ரன்னராக' தவான் ஓடினார். மெக்கே வீசிய போட்டியின் 43வது ஓவரில் கோஹ்லி இரண்டு பவுண்டரி, சிக்சர் அடிக்க, ஸ்கோர் மிக விரைவாக உயர்ந்தது. 

Suresh Raina played an attacking cameo

இவர் 118 ரன்களுக்கு ஹேஸ்டிங்ஸ் பந்தில் அவுட்டானார். இதே ஓவரில் தோனியும்(0) வெளியேற சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் ரெய்னா, சவுரப் திவாரி இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். ஸ்டார்க் ஓவரில் திவாரி அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 48.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அரைசதம் கடந்த ரெய்னா 71, சவுரப் திவாரி 12 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
இப்போட்டியில் அசத்திய இந்திய அணி, விசாகப்பட்டினம் மைதானத்தில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. தவிர, தொடரில் 1-0 என்ற முன்னிலையும் பெற்றது.ஆட்ட நாயகன் விருதை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார்.

தப்பினார் அம்பயர்
நேற்று வினய் குமார் வீசிய போட்டியின் 46வது ஓவரின் 3வது பந்தை ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் நேரடியாக பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது பறந்து வந்த பந்து, அம்பயர் பில்லி பவுடனின் தலையை தாக்க தெரிந்தது. நல்லவேளை கீழே படுத்து தப்பினார் பவுடன்.

யுவராஜ் ராசி
யுவராஜ் அரைசதம் அடித்தால் இந்தியா வெற்றி பெறும். இந்த ராசி நேற்றும் தொடர்ந்தது. தவிர, புதிய நீல நிற உடையில் களமிறங்கிய இந்திய அணிக்கு வெற்றி வசப்பட்டது. இதன் மூலம் புதிய உடையும் ராசியானதாக மாறியுள்ளது.

மோசமான பீல்டிங்
 இந்திய இளம் வீரர்களின் பீல்டிங், மிகவும் மோசமாக இருந்தது. கிளார்க் 57, 61 ரன்கள் எடுத்திருந்த போது, முறையே ஷிகர் தவான், வினய் குமார் ஆகியோர், எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டனர். இதிலிருந்து மீண்ட கிளார்க் சதம் கடந்து, கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். பீல்டிங்கில் சொதப்பிய ஷிகர் தவான், பேட்டிங்கிலும் "டக்' அவுட்டாகி ஏமாற்றினார்.

 Saurabh Tiwary and Suresh Raina walk off after securing India's win


ஸ்கோர் போர்டு
ஆஸ்திரேலியாமார்ஷ்(ப)நெஹ்ரா 0(11)
பெய்னே(கே)வினய்(ப)நெஹ்ரா 9(24)
கிளார்க்-அவுட் இல்லை- 111(138)
ஹசி-எல்.பி.டபிள்யு.,(ப)அஷ்வின் 69(78)
ஒயிட்-அவுட் இல்லை- 89(49)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில் 3 விக்.,) 289
விக்கெட் வீழ்ச்சி: 1-11(மார்ஷ்), 2-16(பெய்னே), 3-160(ஹசி).
பந்து வீச்சு: பிரவீண் குமார் 9-1-51-0, நெஹ்ரா 10-1-57-2, வினய் குமார் 9-1-71-0, அஷ்வின் 9-0-34-1, யுவராஜ் சிங் 10-0-48-0, ரெய்னா 3-0-18-0.


இந்தியா ஷிகர் தவான்(ப)மெக்கே 0(2)
முரளி விஜய்(கே)பெய்னே(ப)மெக்கே 15(18)
கோஹ்லி(கே)ஹோப்ஸ்(ப)ஹேஸ்டிங்ஸ் 118(121)
யுவராஜ்(ப)மெக்கே 58(87)
ரெய்னா-அவுட் இல்லை- 71(47)
தோனி(ப)ஹேஸ்டிங்ஸ் 0(1)
திவாரி-அவுட் இல்லை- 12(17)
உதிரிகள் 18
மொத்தம் ( 48.5 ஓவரில் 5 விக்.,) 292
விக்கெட் வீழ்ச்சி: 1-0(ஷிகர் தவான்), 2-35(முரளி விஜய்), 3-172(யுவராஜ்), 4-256(கோஹ்லி), 5-257(தோனி).
பந்து வீச்சு: மெக்கே 10-0-55-3, ஸ்டார்க் 8.5-0-51-0, ஹேஸ்டிங்ஸ் 10-1-44-2, ஹோப்ஸ் 7-0-56-0, ஹாரிட்ஸ் 10-0-54-0, ஸ்மித் 3-0-23-0


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.