சூரியனின் கடும் வெப்பம் பூமியை குளிர செய்யும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சூரியன் கடுமையாக சுட்டெரித்தால் பூமியில் வெப்பக்காற்று வீசும் என்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல. கடுமையான வெப்பம் பூமியை குளிர்ச்சி அடைய செய்கிறது.
லண்டனை சேர்ந்த இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் சூரியன் குறித்து ஆய்வு மேற் கொண்டனர். சூரியனின் 11 ஆண்டு கால வெப்ப நிலையை கணக்கிட்டதில் அதன் ஒளியும், வெப்பமும் குறைந்து இருந்தது. அப்போது, பூமியில் வெப்பம் அதிகரித்து இருந்தது.
அதே நேரத்தில் அடுத்த 11 ஆண்டு காலத்தில் சூரியனின் கதிர் வீச்சு அதிக அளவில் வெப்பமாக இருந்தது. ஆனால் பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியுடன் இருந்தது. இதன் மூலம் சூரியனின் கடுமையான வெப்பம் பூமியை குளிரச் செய்யும் என தெரிய வருகிறது.
0 comments:
Post a Comment