இவ் தலைப்பைப் படித்தவுடனே சிரிப்பு வரலாம் உங்களுக்கு
இவ் விடயத்தையே நாம் இஸ்மவேலரிடம் (முஸ்லிம்) கூறும் போது இஸ்மவேலருக்கு சிரிப்பு வரும்.காரணம் இவ்வகுப்பாருடைய பின்னணி நிலமை அப்படிப்பட்டது.
காரணம் இவர்கள் சிறுவயதிலேயிருந்து இஸ்லாமியக் காரியங்களை படித்துத் தேறத்தொடங்குவார்கள்.பள்ளிகூடங்களுக்கு (மதரஸா) சென்று பயிலுவார்கள்.குர்ஆனை ஓதத் தொடங்குவார்கள்.பொதுவாக அரபி பாஷையிலுள்ள குர்ஆனைத்தான் அடிப்படையாக வைத்து படிப்பார்கள்.(தமிழில் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அரபிகுர் ஆனையே பாவிப்பார்கள்.)ஆகையால் அரபியில் எழுத்தப்பட்டு இருக்கும் குர் ஆனின் வசனங்களை படித்து முடிக்கிற போது தெளிவாக தடையின்றி குர் ஆனை வாசிக்க முடியும். ஓத முடியும். ஆனால் குர் ஆனின் அர்த்தம் பொருள் தெரியாது.
இந்நிலையில் தங்கள் ஆசிரியர் (குரு) என்ன சொல்லிக் கொடுக்கிறாரோ அவ் படிப்பினைகளே சிறுவயது முதல் அவ் குழந்தைகளின் மனதில் பதியும்.இதே போலவே அவ் குருக்கள் சொல்லிக் கொடுக்கும் பாடம் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை. அவரை பிடிக்க வந்தவர்களில் ஒருவனுக்கு இயேசுவைப் போல ரூபம் மாற்றப்பட்டு இயேசுவுக்கு பதிலாக அவனை சிலுவையில் அறையப்பட்டதாகவும் மேலும் இயேசு அல்லாஹ்வின் உதவியால் தப்பி வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.இப்போது வானத்தில் இருக்கிறார் இனி உலக முடிவில் திரும்ப வருவார்.அந்தி கிறிஸ்துவை அழிப்பார்.என சொல்லிக் கொடுப்பார்கள்.
இதனாலே இஸ்லாமியருக்கு இயேசுவிடம் இன்றும் அதிக மதிப்பு இருக்கிறது.
இதோ இயேசு சிலுவையில் அறைப்பட்டார் என்பதற்கான சில சரித்திர சம்பவங்கள்
வேலியஸ் பேட்டர்குயலஸ்(Valleus Paterculus) என்பவர் ரோமநாட்டு வரலாறு ஆசிரியர்.அவர் 19 வயதுடையவராயிருக்கையில் இயேசு பிறந்தார்.வரலாற்று ஆசிரியர்களான பிரிஸ்கியன் மற்றும் டேசிடஸ் அவருடைய எழுத்து ஓவியங்களை பற்றி கூறுகையில் கம்பேனியா என்ற நகரத்திலிருந்து ஈக்குஸ்டிரியன் வகுப்பைச் சார்ந்து அவன் பரம்பரையில் வந்தவன் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
வேலியஸ் சீசரின் நெருங்கிய நண்பராயிருந்தார்.படிப்படியாக நாளடைவில் உயர் பதவி பெற்று ரோமபுரியின் பெரியவ்களுள் ஒருவனாகக் கருதப்பட்டான்.
அவர் பதினாறு ஆண்டுகள் இராணுவத்தை நடத்தி வந்தான்.
31 ம் ஆண்டு அவர் திரும்ப ரோமாபுரிக்கு வந்து “ஹிஸ்டோரியா டொமானியா” என்ற நூலை எழுதி முடித்தார்.அகஸ்டஸ் இறந்தவுடன் அவர் ஆட்சித் தலைவரானார்.
வேலியஸ் கூறுவதாவது :- யூதேயாவில் நாசரேத் ஊரை சேர்ந்த இயேசு என்பவரை சந்தித்தேன்.ஒருவரிடத்திலும் காணாத மிகச்சிறந்த குணப்பண்புகளைக் கொண்டவராயிருந்தார்.
ஒரு பெரிய இராணுவ சேனையைக்கண்டு பயப்படுவதைவிட அவரைக் கண்டு அச்சங்கொண்டேன் என்றார்.அக்காலத்தில் யூதர்கள் அவரைப்பற்றி வித்தியாசமான எண்ணங்கள் கொண்டிருந்தார்கள்.ஏழை மக்கள் தங்களை ரோமருடைய அதிகாரத்திலிருந்து அவர் விடுவிப்பவர் என்றும் அவரே ராஜா என்றும் சொல்லிக் கொண்டாhகள் என்று எழுதியுள்ளார்.
“வேலியஸ் பேட்டாகுலஸ்” டீ.72 ரோமாபுரியிலுள்ள வாடிகன் நகரில் உள்ளது.
எருசலேமின் பிரசித்தி பெற்ற கல்லறை
இயேசுவின்(சிலுவையிலறையப்பட்டு மரித்த பின்னர்) சரீரம் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறை இன்னும் எருசலேமில் உள்ளது.வருடந்தோறும் உலகமெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான ஜனங்கள் சென்று பார்வையிடுகின்றனர்.இச்சரித்திர காட்சியை யாரும் மறைக்க மறுக்க முடியுமா?
டாசிட்டஸ் சரித்திர ஆசிரியன் சாட்சி
1ம் நூற்றாண்டில் வாழ்ந்த டாசிட்டஸ் என்ற சரித்திர ஆசிரியனின் 55 வது ஆண்டிலே இயேசுவின் சிலுவை மரணத்தை குறித்த காரியங்களை எழுதியுள்ளார்.
ஜோசப்பியஸ் யுதனுடைய சாட்சி
பிலாத்துவின் கட்டளைப்படி 1ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோசப்பியஸ் என்ற யூதன் யூத ஜனங்களின் சரித்திரத்தை இருபது புத்தங்களில் எழுதும் போது இயேசுவின் சிலுவை மரணபாடுகளைக் குறித்தும் அவற்றில் விவரமாக எழுதியுள்ளார்.
லூசியன் கிரேக்க சரித்திர ஆசிரியரின் சாட்சி
100 வது ஆண்டில் வாழ்ந்த கிரேக்க சரித்திர ஆசிரியரான லூசியன் இயேசுவின் சிலுவை மரணபாடுகளை எழுதியுள்ளார்.இவர் எபிக்குரிய நம்பிக்கையுடையவராக இருந்தபடியால் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை புரிய முடியாமல் கேலிபண்ணியும் ஆச்சரியப்பட்டும் எழுதியுள்ளார்.
இத்துடன் இவ் பதிவை நிறுத்தி கொள்கின்றேன் அடுத்த பதிவில் இன்னும் வேறு ஆதாரங்களுடன் உங்களை சந்திக்கின்றேன்.
5 comments:
ஏயேசு எங்கே பிறந்தார்?
மத்திய கிழக்கிலா?
இல்லை
கிரேக்கத்திலா?
-- கிரேக்கத்தில் பிறந்தால் நீங்கள் கூறுவது சரி
-- மத்திய கிழக்கில் பிறந்தால் ஏதோ அதில் நீங்கள் மேல் சுட்டிக்காட்டிய கருத்திற்கு வாய்ப்பு இருக்கிறது
மத்திய கிழக்கா ?
கிரேக்கமா?
ஏன் இயேசி வத்திக்காணில் பிறக்காமல்
பெத்தலகத்தில் பிறந்தார்
இதனை வாசிப்பவர் சிந்தக்க வேண்டும்
Anonymous @
ஏன் வத்திக்கானில் பிறக்கவில்லையா??
நீங்கள் ஏன் அமெரிக்காவில் பிறக்கவில்லை??
இயேசு பிறந்த காலத்தில் வத்திக்கான் என்ற ஒரு இடமே இருக்கவில்லை.
வத்திக்கான் என்ற இடம் இருந்ததுக்கான் ஆதாரம் உங்களிடம் உள்ளதா??
அந்த காலத்தில் மத்தியகிழக்கு என்ற ஒன்று இருக்கவில்லை,
ரோமர்களே மேற்கு முதல் கிழக்கு வரை உலகின் பெரும் பகுதியை ஆட்சி செய்தனர்.
இயேசுவானவர் யூதாவில் பெத்லேகம் நகரில் பிறந்தார்.
யூதா என்ற தேசமே தற்பொழுது இஸ்ரயேல் என்று அழைக்கப்படுகிறது.
உலக படத்தை பாருங்கள் இஸ்ரேல் எங்கு அமைந்துயென்று....
அப்பொழுது தெரியும் உங்கள் மத்திய கிழக்காக அல்லது கிரேக்கமாயென்று...
Anonymous உங்களது பெயரில் வர ஏன் தயக்கம்
எனக்கு தெரியும் நீங்கள் யார்யென்று
james camoron எடுத்த tomp of jesus docmantry பாருங்கள்
நிறைய விஷயம் உங்களுக்கு புரியவரும்.
அவர் எதை ஆதாரமாக வைத்து அதை எடுத்தார் என்று தங்களால் கூறமுடியுமா??
என்னைப் பொறுத்த வரை கடவுள் என்பது ஒன்று தான்.. நாம் தான் பிரித்துப் பார்க்கிறோம்...
Post a Comment