உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள்: ஒரு செயலை தங்களால் செய்து முடிக்க முடியும், என உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள். இதன் மூலம் தங்களது அறிவு வளர்ச்சி பெற்று குணாதியங்கள் மாற வாய்ப்பிருக்கிறது. எளிமையாக பேச ஆரம்பியுங்கள்: புதிய நபருடன் பேச ஆரம்பிக்கும் போது தங்களுக்கு தெரிந்த எளிமையாக விஷயங்களை கொண்டு உரையாடலை துவக்குங்கள். இதனால் பதட்டம் குறைந்து, அந்த உரையாடல் சிறப்பானதாக அமையும்.
நண்பர்களுடன் ஆழ்ந்து உரையாடுங்கள்: நண்பர்களுடன் ஆழ்ந்து மனம்விட்டு பேசுவதால் தங்களது, பேசும் திறன் கூடும். இதனால் புதிய நபர்களிடம் உரையாடுவது எளிமையாக இருக்கும். மேலும் நண்பர்களிடம் உணர்ச்சிப் பூர்வமாக உரையாடுவதன் மூலமாக, தங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
எந்த நிலையிலும் ஆயத்தமாக இருங்கள்: ஒரு முக்கியமான உரையாடலுக்கு அல்லது நேர்முகத் தேர்வுக்கு கலந்து கொள்ள எந்த நிலையிலும் ஆயத்தமாக இருங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும், தங்களுக்கு தெரிந்த விஷயங்ளை தைரியமாக எடுத்துக்கூற பழகிக் கொள்ளுங்கள்.
சூழ்நிலைகளை தவிர்க்காதீர்கள்: ஒரு சந்திப்பிலோ அல்லது நேர்முகத் தேர்விலோ கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது மிகவும் தவறான செயல். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இதனால் தங்களது தன்னம்பிக்கை அதிகரித்து, வாழ்வில் எளிதில் சாதிக்கலாம்.
0 comments:
Post a Comment