அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

இயந்திர மனிதன்



படிமம்:Honda ASIMO Walking Stairs.JPG

செயற்கை அறிவாண்மை என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது. தற்கால தானியங்கிகள் பந்து விளையாடும், நடனம் ஆடும், வயலின் வாசிக்கும் எனினும் மனிதருக்கு இணையாக எல்லா செயற்பாடுகளும் செய்யா. இருப்பினும் எதிர்காலத்தில் மனித அறிவு ஆற்றலுக்கு இணையாக அல்லது மீவும் வண்ணம் இயந்திர அறிவாண்மை வளரக் கூடும்.

ரூறிங் பரிசோதனையின் படி மனிதனில் இருந்து ஒரு தானியங்கியை ஒரு மனிதர் வேறுபாடு கண்டறியா வண்ணம் என்று ஏற்படுகிறதோ அன்று இயந்திரங்கள் அறிவை வெளிப்படுத்துகின்றன என கருதலாம்.
  • பார்வை - Perception
  • பொது அறிவு - Common Sense
  • உணர்ச்சி - Emotion
  • உள்ளுணர்வு - Consciousness

இயந்திர தற்கற்றல்(Machine Learning):

இயந்திர தற்கற்றல் என்பது கணிணி படித்தீர்வு மற்றும் நிரல்களை கொண்டு உணரிகள் அல்லது தரவுத்தளம் உருவாக்கும் தரவுகளை ஆராய்ந்து , சூழ்நிலைக்கேற்ற நடத்தைகளை உருவாக்குதல் தொடர்புடைய அறிவியல் ஆகும்.
இயந்திர தற்கற்றல் என்பதின் முக்கிய நோக்கமே நுட்பமான தரவமைப்புகளிருந்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதாகும்.
மேலும் அதன் திறன் இயற்பியல் பொருள்களின் தரவுகளைக் கண்டவுடனே ஈர்த்துக்கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும், அப்பொருள்களின் சுற்றுப்புறச் சூழ்நிலை களின் உள்ளிட நிலைமைகளுக்கேற்ப, தரவுகளை நடைமுறைப் படுத்துவதும், பல்வேறு ஊக்கிகளுக்கு ஈடு கொடுப்பதற்கேற்பவும் அமைந்திருக்கும்.
காரணமறியும் திறன்
காரணச்சிக்கல்களை கணிணி நிரல்களை கொண்டு படிமுறைத்தீர்வு காணும் திறன் செயற்கை அறிவாண்மையின் முக்கிய துணைப்பொருள் ஆகும். மனிதர்களைப் போல் உள்ளுணர்வால் முடிவுகளை இயந்திரங்கள் எடுப்பதில்லை, இயந்திரங்கள் படிப்படியாக காரண காரியத்துடன் நிரல்களைக் கொண்டு படிமுறை நிலைகளைத் தீர்மானிக்கும்
அறிவு இயற்றிகள் அல்லது செயற்கை முகவர் இலக்குகளை அமைத்து, அவற்றை அடைய வேண்டும்.


செயற்கை முகவர்கள் என்பது தனித்தியங்கும் அமைப்பு ஆகும்(எ.க: கணிணிகள்,தானியங்கிகள்). • வெற்றி, தவறு, நடத்தை அடிப்படையில் தன்னைத் தானே சோதித்து கொள்ள வேண்டும். • கணிணி இணைப்பினூடாக தானாக இயங்கி பொருந்த வேண்டும்.
செயற்கை முகவர்கள் சூழ்நிலைகளுக்கேற்ப நிலைகள் மற்றும் எவற்றை செயல்படுத்தினால் வெற்றியின் நிகழ்தகவு அதிகரிக்க முடிவெடுக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு தானியங்கி சூழ்நிலைகளிருந்து உணரிகளால் சமிக்ஞைகளை பெற்று ஒரு வெளிஉலக வேலையை செய்ய இயக்கிகளையும் விசைப்பொறிகளையும் இயக்கும்.

சமீபத்தில் கூகுளின் நிறுவனம் தானாக இயங்க கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து இருந்தது.


Post Comment


2 comments:

ம.தி.சுதா said...

படத்துடன் சேர்த்து அருமையான பதிவு ஒன்றை தந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்...

டிலீப் said...

\\படத்துடன் சேர்த்து அருமையான பதிவு ஒன்றை தந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்\\

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மதி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.