இன்று நம் வாழ்வில் இணையம் ஒரு முக்கிய அங்கம் ஆகிவிட்டது. இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் நீங்கள் , நண்பர்கள் உறவினர்களோடு இணையம் வழியே உரையாட ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஸ்டண்ட் மெசேஞ்சர் மென்பொருள்களைப் பயன் படுத்துகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு உதவ முன் வருகிறது ' பிட்ஜின் ' எனும் உடனடி இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர் மென்பொருள்.
முன்னர் கெய்ம் எனப் பெயரிடப் பட்டிருந்த இது இப்போது இலவச மென்பொருளாக கிடைகிறது. . இந்த அப்ளிகேசன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உடனடி இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர் சேவைகளுடன் இணைப்பை ஏற்படுத்தக் கூடிய வசதியைத் தருகிறது. அதாவது இந்த இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர் மூலம் யாகூ சேவையில் ஒரு நண்பரோடும், கூகுளில் வேறொரு நண்பரோடும், எம்.எஸ்.என் சேவையில் மற்றுமொரு நண்பர் என ஒரே நேரத்தில் பல பேருடன் பல வலையமைப்புக்களில் சாட் செய்திட முடியும். பிட்ஜின் மென்பொருளை உடனடி மெசேஞ்ஜர் சேவைகளை வழங்கும் பிரபலமான ஏஓஎல், எம்எஸ்என், யாகூ மற்றும் அதிகம் பிரபலம் இல்லாத ஜாபர் அண்ட் காடு-காடு போன்ற மெஸ்ஸென்ஜர் சேவைகள் உட்பட மொத்தம் 17 வலையமைப்புக்களுடன் பயன்படுத்த முடியும்.
அத்தோடு இணையம் வழி தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஸ்கைப் மற்றும் பிரபலமான சமூக வலைத்தளமான பேஸ்புக் என்பன தரும் உரையாடல் வசதியையும் பிட்ஜினில் பயன் படுத்தலாம். எனினும் இதற்கு நீங்கள் புதிதாக ஒரு பிளக் இனை நிறுவிக் கொள்ள வேண்டும். பிட்ஜின் நிறுவியதும் நீங்கள் பயன் படுத்த விரும்பும் ' இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர் ' சேவையை தேர்வு செய்து அந்த சேவைக்கென உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் வழங்கி பதிவு செய்து விடுங்கள்.
அந்த சேவையைப் பெறும் உங்கள் நண்பரோ உறவினரோ அப்போது இணைப்பில் இருப்பின் அது பற்றி திரையில் காண்பிக்கும்.. அதன் மூலம் அவர்களுடன் உரையாடலை ஆரம்பிக்கலாம். பிட்ஜின் மூலம் சாட்டிங் செய்வது மட்டுமன்றி பைல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதியும் பெறலாம். பிட்ஜின் மூலம் வீடியோ மற்றும் குரல் வழி உரையாடலில் ஈடுபட முடியாது என்பது ஒரு குறையாகும். எனினும் இந்தக் குறைபாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என எதிர் பார்க்கலாம்.
0 comments:
Post a Comment