உலக உணவு தினத்தை உலகளாவியில் நேற்று கொண்டாடப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் போஷாக்கினை அதிகரிப்பதற்கும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், விவசாயத்தையும், உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும், சந்தைப்படுத்தல், விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை போக்குவதற்காகவும் பாடுபடுகின்றது.
இதன் இலச்சினையிலுள்ள fiat panis என்பதன் பொருளானது “ரொட்டி (இலங்கையில்: பாண்) ஆவது மனிதனுக்கு இருக்கவேண்டும்” என்பதாகும்.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் தாபனம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு பகுதியினர்க்கு உணவு தட்டுபாடு என்றால் என்னவென்று தெரியாமல் மிதமிஞ்சிய உணவுகளை என்ன பண்ணுகிறார்கள் என்று பாருங்கள்.
மிகுதியான உணவு குப்பையாக.........
மிதமிஞ்சிய உணவை பாருங்கள்
இன்னுமொரு பகுதியினர்; ஒருவேளை சாப்பாட்டுக் கூட வழியில்லாமல் இருக்கின்றனர்
வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காக பாடசாலைக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு உள்ளனர்.
உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதும் பட்டினிச் சாவுகள் பெருமளவில் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாதது.
DON'T Waste FOOD Any More
0 comments:
Post a Comment