சந்திரனில் தண்ணீரோடு வேறு சில கனிமங்களும் இருக்கின்றன. மேலும், சந்திரன் தனக்கேயுரிய நீர் சுழற்சி முறையைக் கொண்டிருக்கிறது’ என்று, அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஓர் ஆண்டுக்கு முன், அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சிக் கூட விஞ்ஞானிகள், சந்திரனில் தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அதையடுத்து தொடர்ந்து சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று, ‘சயின்ஸ்’ பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில், சந்திரனில் தண்ணீர் மற்றும் வேறு சில அரிய வகை கனிமங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
‘நாசா’ அனுப்பிய செயற்கைக் கோள் ஒன்று, 2009, அக்டோபரில், சந்திரனின் மேற்பரப்பை ஆய்ந்த போது இந்த முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும், சந்திரனின் சில பகுதிகளில் தண்ணீர், பனிக்கட்டிகள் வடிவில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, ‘நாசா’வின் சந்திரனைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளின் குழுத் தலைவர் மிக்கேல் வார்கோ கூறுகையில்,‘சந்திரனின் மறுபக்கம் சூரிய ஒளி விழாத பகுதிகள் உள்ளன. அங்குதான் தண்ணீர், பனிக்கட்டி வடிவில் இருக்கிறது’ என்று தெரிவித்தார். சந்திரனின் மேற்புறத்தில் உள்ள மெகா பள்ளங்களின் விளிம்புகளில் செயற்கைக்கோள் ஆய்வு நடத்தியதில், ஆங்காங்கே நீராவி மேகங்கள் இருப்பதும் தெரிந்துள்ளது.
0 comments:
Post a Comment