எந்திரன் ஒரு மந்திரன்
எந்திரன் படத்தை பற்றி சொல்லுவதற்கு என்னிடம் எதுவுமில்லை
அந்தளவுக்கு இயக்குனர் சங்கர் ஹாலிவுட்க்கு இணையாக இல்லவே இல்லை அதற்கு மேலாக படத்தை மிக நேர்த்தியாக பார்ப்பவர்களுக்கு சலிப்பு தன்மை ஏற்படாத மாதிரி அடுத்து என்ன நடக்குமென்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக எந்திரனை உருவாக்கி இருக்கிறார்.
சினிசிட்டி ஹாலுக்கு 1.30மணி படம் தொடங்கும் அதற்கு 1மணி நேரம் முன்தியே நான் அவ்விடம் போனேன். ஆஹா ஆஹா படம் பார்ப்பதற்கு நின்ற கூட்டத்தை பார்த்ததுமே இன்டைக்கு படம் பார்க்க டிக்கட் கிடைக்குமோ என்ற பயம் வேற…அந்தளவுக்கு கொட்டு மழையிலும் படம் பார்க்க ஆர்வத்துடனான மக்கள் கூட்டம்.
ஒருவாறு அடிச்சு பிடிச்சு டிக்கட் எடுத்து ஹாலுக்க போயிட்டன்.
என்னடா இவன் படத்த பற்றி சொல்லாம இவன்ட நொந்த கதைய சொல்லுறான் என்று நீங்க கேட்கிறது எனக்கு புரியுது.
சரிங்க வாங்க படத்த பார்ப்பம்.என்ட நினைவில இருக்குறத எழுதறன் உள்குத்தம் ஏதாவது இருந்தா அஜஸ்ட் பண்ணிகொள்ளுங்க.
டைட்டில் ஆரம்பிச்சதுமே படம் எந்தளவுக்கு ரிஸ்க் எடுத்து பண்ணி இருப்பாங்க என்று விளங்குது.டைட்டில் செல்லும் ஸ்டைல் அதனுடன் சேர்ந்து புதிய மனிதா என்ற பாடலுடன் வசீகரன் (ரஜனி) தனது 10 வருட உழைப்பின் மூலம் சிட்டி என்ற ரோபோவை உருவாக்குறார்.அதை இராணுவத்துக்கு வழங்குவதே அவரின் கனவு.
ஒரு ரோபோவை ஆக்கையும் பயன்படுத்தலாம் அழிக்கவும் பயன்படுத்தலாம் என்பதே கதையின் மைய கரு.
ஏந்திரன் படத்தின் முக்கிய அம்சங்களை சொல்லுறன்….
ரோபோவை உருவாக்கியதும் இதற்கு பேச சொல்லி கொடு என்று சந்தானம் கருணாஸிடம் வசீகரன் சொல்லி செல்வார்.
அவங்க ரோபோக்கு சொல்லி கொடுக்கிற வார்த்தையை திரும்ப அதை வசீகரனிடம் சொல்லும் போது திரைஅரங்கமே கூச்சல்தான்.
சனா (ஜஸ்) வசீகரனிடம் நம்ம லவ்வ இதோடு நிறுத்திக்கொள்ளுவம் ரெண்டு பேரும் கொடுத்த கிப்டை திரும்ப அவர்களிடமே கொடுக்க எல்லாம் குடுத்தாசு நான் குடுத்த 512 கிஸ் எங்க என்டு வசீகரன் கேட்பது ஒரே ரோமன்டிக் தான்
சிட்டியை டெஸ் பண்ண கடவுள் இருக்குரறா இல்லையா என்ற கேள்விக்கு அது யார் என்று கேட்பது அதற்கு கேள்வி கேட்டவர் அவன் எங்களை படைத்தவன் என்று சொல்லும் போது சிட்டியின் பதில் ஆம் கடவுள் இருக்குறார் என்று வசீகரனை காட்டுவது….
மிக நேர்த்தியாக வசனம் அமைத்துள்ளார்கள்.
தீப்பற்றி எரியும் கட்டத்தில் உள்ளவர்களை காப்பறுவதும் செல்வி என்ற பெண்ணின் முடிவும் ரோபோக்களுக்கு உணர்ச்சிகள் என்றதும் உணர்ச்சிகள் என்றால் என்ன என்பதை கற்பிக்கும் முறை அதே தனக்கு ஆபத்தாக வருவது.
முதன்முறையாக ரோபோ ஒன்று பிரசவம் பார்ப்பது
சனாவின் பரீட்சை நேரத்தில் புதிய தொழிநுட்பத்தில் பிட் அடிப்பது.பிட் அடிக்க தெரியாதவங்க இதை பாருங்க எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்.
சிட்டி சனாவிடம் மனதை பறிகொடுப்பது சனாவை குத்திய நூளம்பை தேடி போய் அதை சனாவிடமே மன்னிப்பு கேட்க வைப்பது கலக்கல்.
பாடல்களை பற்றி சொல்லியே ஆகவேண்டும்
எல்லா பாடல்களையும் மிக மிக பிரமாண்டமாக எடுத்துள்ளார்கள்.
காதல் அணுக்கள் பாடலில் பாலைவனத்தில் செயற்கையாக அமைத்துள்ள நீருற்றுக்கள் பார்ப்பவர்களின் கண்ணை அப்படியே எங்கேயும் பார்;க்கதாபடி செய்கிறது.
கிளிமஞ்சரோ பாடல் புதிய உலக அதியங்களில் ஒன்றான பெரு நாட்டின் மாச்சு பிச்சுவில் பாடலை அமைத்துள்ளார்கள்.தியேட்டரிலிருந்தே மாச்சு பிச்சுக்கு போன மாதிரியான உணர்வு.
யுத்தம் மிக அற்புதமாக கமராமென் ரத்னவேல் தனது வேலையை பண்ணியுள்ளார்.எடிட்டிங் அன்டனி பின்னணி இசை ரகுமான் அருமையாக தங்கள் பணியை செய்துள்ளனர்.
இப்பிடியே எழுதிடு போகலாம் நிறைய சோ நீங்க இதை பார்த்துடு படத்த போய் பாருங்க கதை விளங்கும்.
இன்னுமொரு தடவை போய் பார்க்கனும் என்ற ஆசை இருக்குதான் பார்ப்பம்.
ஏதாவது தவறுகள் இருந்தா கொஞ்சம் சகிச்சு கொண்டு வாசிங்க
நன்றி.
0 comments:
Post a Comment