பொதுவாக மனிதர்கள் தான் வன விலங்குகளை வேட்டையாடிக் கொன்றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது.
ஆனால், 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த குரங்கு மனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப்பட்டான் என்பதை நிருபித்துள்ளார் லீ. ருபர் ஜர் என்ற ஜோகன்னஸ்பர்க் பல்கலைகழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர். டவுங் குழந்தை எனப்படும் மனித முதாதையரின் தொல் படிவுகள் 1924 இல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த மனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடைப்பெற்றது வந்தது. ஒரு புலியோ, ஈட்டி பேன்ற கூர்மையான பற்களை உடைய பூனை போன்ற விலங்கோத்தான் ஆதிமனிதனைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் யோசித்து வந்தனர்.
ஆனால் ஆதி மனிதனை புலி அடித்துகொல்ல வில்லை ஒரு பெரிய பறவைத்தான் வேட்டையாடிக் கொன்றது என்று புத்தாண்டுகளுக்கு முன்பு லீ பெர்ஜர், தமது சக ஆராய்ச்சியாளர் ரோன் கிளர்க்குடன் சேர்ந்து நிருபித்தார். ஆதிமனிதனின் புதைப்படிவுகள் கிடைத்த இடத்தில் இருந்து சிறிய குரங்குகளின் புதை படிவுகளில் இருந்து அவை பறவையால் தான் கொல்லப்பட்டன என்பது நிருபிக்கப்பட்டது.
ஆகவே குரங்கு போன்று இருந்த ஆதிமனிதனும் பறவையால் தான் கொல்லப்பட்டிருக்க வெண்டும் என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர். ஆனால் பறவை தாக்கித்தான் ஆதி மனிதன் இறந்தான் என்பதை அவனுடைய மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதம் மூலம் இவர்களால் நிருபிக்க முடியாமல் இருந்தது. ஜந்து மாதங்களுக்கு முன்பு மேற்கு ஆபிரிக்காவில் காணப்படும் கழுகுகள் ஆதிமனிதனை வேட்டையாடிய பறவை போல் இருப்பதை எடுத்து பாட்டும் ஓஹேயோ அரசின் கட்டிரை ஒன்றை லீ பெர்ஜர் படித்தார்.
கழுகுகள் மேலே இருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து தங்களது கூரிய கால் விரல்களால் குரங்குகளின் மண்டை ஓட்டை குத்திக்கிழிப்பதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான குரங்குகளின் மண்டை ஓடுகளை ஆராய்ததில் கண்துளைகளுக்கு பின்னால் ஓரே மாதிரியான துளைகளும்,வெட்டுக்களும் தெரிந்தன.
இரதப்படித்த பெர்ஜர் டவுங் குழந்தையின் மண்டை ஓட்டுடன் ஒப்பிட்டார். அதிலும் கண்துளைகளுக்குப் பின்னால் வெட்டுக் காயம் ஏற்படும் சேதம் தெரிந்தது.ஆகவே ஆதிமனிதன் வானில் இருந்தும் வேட்டையாடிக் கொல்லப்பட்டது.
0 comments:
Post a Comment