அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:


நான் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் வெளிவந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளிவந்தது. சமீபத்தில் திரைக்கு வந்த, "எந்திரன் திரைப்படத்தை பார்த்த என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம் என் படைப்பான "ஜூகிபா என்ற சிறுகதையை அப்படியே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

சமீபத்தில் நானும் அந்த படத்தை தியேட்டரில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என், "ஜூகிபா கதையை மூலக்கதையாக வைத்து, சினிமா சங்கதிகளான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து, "எந்திரன் படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்திய பத்திரிகை பதிவாளர் முன் பதியப்பட்ட, "இனிய உதயம் இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது, "ஜூகிபா கதையை படமாக்க, என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறவில்லை. மோசடி செய்து, லாபம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் இயக்குனர் சங்கர், 1997 - 98ல் தான் கற்பனை செய்தது போல் பொய்யாகக் கூறி, "எந்திரன் படத்தை உருவாக்கி, அவரே அதன் இயக்குனராக செயல்பட்டுள்ளார்.

இயக்குனரும், தயாரிப்பாளரும் சேர்ந்து கூட்டு சதி செய்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிட்டு, என் காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர்.  இந்திய காப்புரிமை சட்டத்தின்படி, கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இயக்குனர், தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் தனது கதை வெளியாகி இருந்த பத்திரிகையின் நகலையும் ஆரூர் தமிழ்நாடன் இணைத்திருந்தார். கமிஷனரிடம் அளிக்கப்பட்ட புகார் குறி்தது அமுதா தமிழ்நாடன் கூறுகையில், "இரண்டு முறை இந்த சிறுகதை வெளிவந்துள்ளது.  முதலில் நண்பர்கள் கூறியதை நான் நம்பவில்லை. நான் பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன். இதுகுறித்து சிவில் வழக்கு தொடரப்படும். இப்பிரச்னையில் நடவடிக்கை எடுப்பதாகவும், சைபர் கிரைம் பிரிவில் விசாரிக்கும்படி பரிந்துரை செய்தும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார், என்றார்.

அமுதா தமிழ்நாடனின் வக்கீல் எட்விக் அளித்த பேட்டியி்ல, காப்புரிமை சட்டத்தை அவர்கள் மீறியுள்ளனர் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. இது கிரிமினல் குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை உண்டு. இதுதவிர சிவில் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். இந்த புகார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசின் சைபர் குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வேறு மொழியில் வெளியாகி இருக்கும் `எந்திரன் சினிமாவை எதிர்த்தும் வழக்கு தொடர இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.