அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. கொச்சி அணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2008ல் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

 ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகள் ஆண்டு தோறும் வெற்றிகரமாக நடந்தன. இதில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் ஏலம் மூலம் கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டன. 

சசி தரூர் சர்ச்சை:  பஞ்சாப் அணியை பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தா, தொழில் அதிபர் நெஸ் வாடியா, கரண் பால், மோகித் வர்மன் சேர்ந்து ரூ. 304 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். இதே போல ராஜஸ்தான் அணியை "எமர்ஜிங் மீடியா' நிறுவனம் ரூ.268 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் பெரும்பாலான பங்குகளை பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி வாங்கினார். 

இந்த ஆண்டு நடக்க உள்ள நான்காவது ஐ.பி.எல்., தொடரில் 10 அணிகள் பங்கேற்க இருந்தன. புதிய அணிகளாக கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்பட்டன. கொச்சி அணியை "ரெண்டஸ்வஸ்' நிறுவனம் 1, 530 கோடிக்கு வாங்கியது. இங்கு தான் பிரச்னை ஆரம்பமானது. கொச்சி அணியின் பங்குகள் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மற்றும் ஐ.பி.எல்., தலைவராக இருந்த லலித் மோடி இடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்னை பெரிதாக, லலித் மோடி மீது ஊழல் குற்றம்சாட்டப்பட்டு "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 

இது தொடர்பாக நடந்த விசாரணையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் லலித் மோடியின் உறவினர்களுக்கு பங்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. தவிர, பஞ்சாப் அணியின் கணக்குகள் தொடர்பாகவும் சந்தேகம் எழுந்தது. இந்த இரு அணிகளும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. தவிர, கொச்சி அணியின் உரிமையாளர் தொடர்பாகவும் சர்ச்சை ஏற்பட்டது.
அதிரடி முடிவு:  இந்த மூன்று அணிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஐ.பி.எல்., நிர்வாக குழுவின் அவசர கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. இதில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. 

உரிமையாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும்படி கொச்சி அணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இரண்டு அணிகள் நீக்கப்பட்டதால், ஐ.பி.எல்., தொடரில் மீண்டும் 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

இது குறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில்,""சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை நீக்குவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. கொச்சி அணியினர் தங்களது பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.