அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

சீயோப்ஸ்
கி.மு.26ம் நூற்றாண்டு.



எகிப்தில் கீசா என்னுமிடத்திலுள்ள மாபெரும் பிரமிடைக் கட்டியத்தற்காக அழியாப் புகழ்பெற்றவர் எகிப்திய அரசர் குஃப்பூ  ஆவார்.(இவருடைய பெயரின் கிரேக்க வடிவம் தான் சீயோப்ஸ்.) இவர் தமக்குக் கல்லறையாக இந்த பிரமிட்டைக் கட்டினார் என்பர்.இவரது பிறந்த இறந்த தேதிகள் சரியாகக் தெரியவில்லை.எனினும் இவர் கி.மு.26 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் மெம்பிஸ் நகரை தமது தலைநகராகக் கொண்டிருந்தார்.இதைத் தவிர இவருடைய வாழ்க்கை பற்றிய வேறு தகவல்கள் தெரியவில்லை.



இந்த மாபெரும் பிரமிடு மிகப் புகழ் பெற்றதும் மனிதமுயற்சியால் எழுப்பப்பட்ட மிகப் பிரம்மாண்டமானதுமான ஒரு கட்டுமானம் என்று மட்டுமே சொல்ல முடியும்.பண்டை நாட்களில் கூட இது உலகின் ஏழு அதியங்களின் ஒன்றாகக் கருதப்பட்டது மற்ற ஆறு அதியங்களும் காலத்தால் அழிந்து விட்ட போதிலும் இந்த மாபெரும் பிரமிடு காலத்தைவென்று இன்றும் அழியாமல் அதைக்கட்டிய மன்னருக்கு நிலைத்த நினைவுச் சின்னமாக விளங்குகின்றது.



இதை கட்டுமானம் செய்துள்ள துல்லியமும் இதன் பிரம்மாண்ட வடிவளவும் மலைக்க வைக்கின்றன்.இந்த மாபெரும் பிரமிடின் முகட்டுப்பகுதியில் 30 அடி நாசமாகி விட்டபோதிலும் இன்றும் கூட இதன் உயரம் 450 அடி உயரத்திற்கு இருக்கின்றது.


இது ஒரு 35-அடுக்க மாடிக்க கட்டிடத்தின் உயரத்திற்கு சமமானது.இது சுமார் 23,00 000 கற்பாளங்களால் கட்டப்பட்டுள்ளது.இக்கற்பாளங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக இரண்டரை டன் எடை கொண்டவை.இந்த மாபெரும் பிரமிடில் பல உள்ளறைகளும் நடைபாதைகளும் அமைந்துள்ளமையால் இதைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்களைப் பல்வேறு வடிவளவுகளில் வடிவாக்கம் செய்யவேண்டியிருந்தது.அதுவே இப் பிரமிட்டைக் கட்டும் பணியை மேலும் சிக்கலாக்கி இருக்கும்.





ஏறத்தாழ 46 நூற்றாண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்தியர்கள் இக்கால நவீன எந்திர சாதனங்களின் உதவியின்றி இவ்வாறன மாபெரும் கட்டுமானத்தை எவ்வாறு கட்டினார்கள் என்பதை தெளிவாகத் தெரியவில்லை.


இந்த மகத்தான பணிக்கு நாட்டின் வளவசதிகளை வெற்றிகரமாக திரட்டுவதற்கு கவனமான திட்டமிடலும் மிகச் சிறந்த நிருவாகக் திறமையும் தேவைப்பட்டன என்பதில் ஜயமில்லை.இந்த பெரும் பிரமிடு கட்ட சுமார் நூறாயிரம் மக்கள் 20 ஆண்டுகள் உழைத்தார்கள் என்ற கணிப்பை ஏற்றுக்கொள்வதாயின் ஒவ்வொரு நாளும் சராசரியாக 300 க்கு அதிகமான கற்பாளங்களை பொருத்திருக்க வேண்டும்.


அத்தனை எண்ணிக்கையிலான கற்பாளங்களை பிரமிடு கட்டப்பட்ட இடத்துக்கு செல்வதும் அதை விரும்பிய வடிவளவுகளில் வெட்டுவதும் அவற்றை வேண்டிய இடங்களில் துல்லியமாக பொருத்தி வைப்பதும் மிகப் பெரிய பணியாக இருந்திருக்க வேண்டும்.


இந்த கற்பாளங்களை கொண்டு செல்ல ஏராளமான படகுகளை பயன்படுத்திருக்க வேண்டும்.இந்த திட்டத்தில் வேலை செய்த ஏராளமான தொழிலாளர்களுக்கு இன்றியமையாத தேவைப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நன்கு திட்டமிட்ட பொருள் வழங்கும் முறையை ஏற்படுத்தி இருப்பர்.


இந்த மாபெரும் பிரமிடு ஏற்கனவே 4500 ஆண்டுகளுக்கு மேலாக நிலைபெற்று வாழ்ந்துள்ளது.நவீன பொறியியல் வல்லுநர்கள் எழுப்பிய கட்டிடங்கள் கூட இடிந்து மண்ணோடு மண்ணாக போய் விட்ட பின்னரும் கூட நெடுங்காலத்திற்கு இந்த பிரமிடு வாழ்ந்திருக்கு எனலாம்.இதன் மீது ஓர் அணுகுண்டு நேரடியாக வீழ்ந்தால் கூட இது அழிந்து விடுமெனத் தோன்றவில்லை.ஆனால் இன்றைய அரிமான வீதம் நீடித்தால் கூட இது இன்னும் 10 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.


எனவே உலகில் தனது அழியா முத்திரையை பதித்து சென்றுள்ள சீயோப்ஸ் அரசர் உலகில் இது வரை தோன்றிய வேறு எந்த ஒரு மனிதனையும் விட அழியாப் புகழை ஈட்டியிருக்கிறார்.நெப்போலியனையோ மகா அலெக்சாநடதரையோ இன்னும் 10 000 ஆண்டுகளுக்கு பின் யாராவது நினைவில் வைத்திருப்பார்களா? இலங்கை ஜனாதிபதி மகிந்தாவின் புகழ் இன்னும் 10, 15 வருடங்கள் வரை தான் ஆனால் புகழ் என்பது செல்வாக்கிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டது. சீயோப்ஸ்
தமது சமகாலத்து எகிப்தியர்களின் வாழ்வில் மிகப் பெரும் விளைவினை ஏற்படுத்தினார். 



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.