அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



மொழியின் தோற்றம் என்று சொன்னதும் தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியோ, சீன மொழியின் பண்டைய வரலாற்றைப்பற்றியோ அல்லது கிரேக்கம், அரபு மொழிகளின் உருவாக்கத்தை பற்றியோ பேசவுள்ளதாகவே நாம் நினைக்கின்றோம்.



ஏதோ ஒரு மொழியை குறித்த தகவல்களை சொல்லப்போகிறார்கள் என்றே நமது எண்ணங்கள் நமக்கு குறிப்புணர்த்தும். ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மொழியைப் பற்றிய மூலத்தைஅறியப்போவதில்லை மனிதர்தனது இனத்தோடு தொடர்புக்கொள்ள பயன்படுத்திய மொழியின் உருவாக்கம் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். அறிவியலாளர்களின் கூற்றின் படியும் மனிதர்கள் விலங்கின கூட்டத்தில் ஒரு இனமே ஆறாவது அறிவு என்ற பகுத்தறிவு கொண்டவன் என்பதே ஒரு சிறப்புத் தகுதியாகக் கொண்டு மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டவன் என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். 


இன்னும் சொல்லப் போனால் மேம்பட்டவர்கள் பண்பட்டவர்கள் என்று நமக்கு நாமே அடைமொழிகளை தந்திருக்கின்றோம். சமூக அவலங்களை பார்க்கும் போது,மற்ற விலங்குகளில் இருந்து எந்த வகையில் மனிதன் வேறுபட்டான் என்ற கேள்வி பல முறை எழத்தான் செய்கிறது. என்ன செய்ய.சரி விலங்குகளில் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை, ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் கொண்டவை என்று சொல்லப்படுவபை சிம்பன்சி,போனோபோ ஆகிய குரங்குகளாகும். சிம்பன்சியை நாம் அறிந்திருப்போம் ஆனால் போனோபோவை அவ்வளவாக நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 


பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்தடுத்தாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களை ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டனர். பொதுவாக மனிதர்களிடையே பேச்சு மொழியே முதலில் தொன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம்.  எழும்பிய மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கும் என்பது தெளிவு. 


ஆனால் முதலில் மனித னெம் செய்கைகளையும், உடல் அசைவுகளின் மூலமான செய்திகளையும் தான் பரிமாறிக்கொண்டிருக்கும் என்பதற்கு ஆதாரமாக, அண்மையில் சிம்பன்சி மற்றும் போனோபோ குரங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்ட தகவல்கள் அமைந்துள்ளன.

ஆண் சிம்பன்சி மற்றும் போனோபோக்கள் தங்களுக்கு பசிக்கிறது உணவு கொஞ்சம் தா என்ற சக இனத்தவரிடம் கேட்கும் போது சரி, பெண் குரங்குகளை காதல் இச்சைக்கு இணங்க அழைக்கும் போதும் சரி அல்லது மற்ற ஆண் குரங்குகள் இனததோடு சண்டையிட்டு ஓய்ந்து சரி நாம் அமைதியா பிரிந்து செல்வோம், நண்பர்களாகுவோம் என்று சொல்ல விரும்பினாலும் சரி, திறந்த கைகளை நீட்டுகின்றனவாம். அதாவது ஓரே ஒரு அசைவு தான் ஆனால் இடத்திற்கு ஏற்றால் போல் அது வெவ்வேறு பொருள் கொள்ளப்படுகின்றது. 

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. முக பாவனைகளை காட்டிலும் குரல் எழுப்பி தொடர்பு கொள்வதைக் காட்டிலும் இவை சைகைகளை அங்க அசைவுகளின் மூலமான மொழியையே அதிகமாக பயன்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டரிந்துள்ளன.    


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.