நில மேற்பரப்புக்களில் மணற்றரைகளில் இருந்து காவிச்செல்லப்பட்டு சமுத்திர மேற்பரப்புக்களில் படியவிடப்படும் துகள், தூசிகள் மற்றும் புழுதி என்பன கடல்வாழ் உயிரினங்களின் உணவுவலைகளில் ஆரம்ப இடத்தினை வகிக்கும் மிகச்சிறிய அல்கா இனங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதன ஆகும்.
ஆனால் சில பகுதிகளில் இருந்து குறிப்பாக சகாரா பாலைநிலங்களில் இருந்து காவிச்செல்லப்படும் இவ்வகை தூசி, துகழ்களே அவ் அல்காக்களின் அழிவுக்கும் காரணமாகி வருவதைனை செங்கடலின்...
வடக்கு பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வகள் சில இன்று உறுதிப்படத்தியுள்ளன. Adina Paytan, (an associate researcher in the Institute of Marine Sciences at the University of California, Santa Cruz.) இது பற்றி கூறும்போது. “இதுவே முதற்தடவையாக இப்பிரச்சினை இனங்காணப்படும் சந்தர்ப்பம்” என்றார்.
இதுவரைகாலமும் சமுத்திரவியலாளர்கள் இவ்வகையான தூசிகள், துகழ்கள் என்பனவற்றின் மூலம் சமுத்திரத்தில் உள்ள அல்காக்கழுக்கு
தேவையான நைதரசன், பொஸ்பரஸ் மற்றும் அயன் என்பன கிடைக்கின்றமையினால் இத்துகழ்கள் சமுத்திரவாழ் அல்காக்களின் பெருக்கத்திற்கு துணைபுரிகின்றன என கருதிவந்தார்கள்.
ஆனால் இன்று நிலப்பரப்பு வளிமாசடைவாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சமுத்திரங்கள் மீது படியவிடப்படும் துகழ்களின் தன்மைகளும் மாறிவருவதை நாம் அவதானிக் வேண்டும் என்கிறார் யுனiயெ Pயலவயn. இன்று காற்றின் மூலம் பெருமளவான தூசிகள் சகாரா பாலைநிலங்களில் இருந்து காவிச்செல்லப்பட்டு மத்தியதரைக்கடல்களில் படியவிடப்படுகின்றன.
இத்துகழ்களில் பெருமளவான செம்பு (ஊழிpநச) கலந்திருப்பதால் இவை சமுத்திர மேற்பரப்பை அடைந்தவடன் 24 மணித்தியாலங்களில் அப்பிரதேசத்தில் உள்ள அல்காக்கள் இறக்கத்தொடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமுத்திர உணவு வலையின் ஆரம்பமாகிய இவ்வகை அல்காக்களின் இறப்பு ஏனைய சமுத்திர உயிரினங்களையும் பாதிக்கும் ஆபத்தினை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் பல இடங்களில் பெற்ற மாதிரிகளுக்கு அமைவாக மனிதனால் 40 வீதமான செப்பு படிவுகளும், இயற்கை மூலம் மிகுதியும் நடைபெறுவதாக கூறுகின்றனர்;. இன்று வங்காள விரிகுடா, தென்கிழக்கு ஆசிய கடற் சுற்றாடல் என்பனவும் பகுதியளவில் இத்தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலத்தில் உள்ள அதிகமான காபனீரொட்சைட்டினை நுகரும் பல காரணிகளில் அல்காக்களின் ஒளித்தொகுப்பும் ஒரு காரணியாகும்.
சமுத்திரத்தில் இவற்றின் இறப்புக்கள் நில மேற்பரப்புகளில் காலநிலை மாற்றங்களை தோற்றுவிக்கும் அளவிற்கு பாரியவையாக இருக்கும் என எச்சரிக்கப்படுகின்றது. யூலை 2008 இல் லிவர் பூல் பல்கலைக்கழகம் ஓர் ஆய்வில் சகாரா பாலைநிலங்களில் இருந்து வீசும் இப் புழுதிப்படலங்களின் மூலம் கிடைக்கும் அயன், பொஸ்பரஸ் என்பன வடக்கு அத்திலாந்திக் சமுத்திர நாடுகளில் தாவரங்களின் நிலையான வளர்ச்சிக்கு துணைபுரிவதாக தெரிவித்திருந்தது.
ஒவ்வொரு வருடமும் சகார பாலை நிலங்களில் இருந்து 500 மில்லியன் டன் புழுதிப்படலம் காற்றின் மூலம் காவிச்செல்லப்பட்டு வடக்கு அத்திலாந்திக் மற்றும் மத்தியதரைக்கடல் என்பனவற்றில் படியவிடப்படுவதாக கூறப்படுகிறது. இத்துகழ்கள் சூரிய ஒளியை மீண்டும் பூமிநோக்கி தெறிப்படைய செய்வதனால் வளிமண்டலத்தை சூடாக்கினாலும் கடல்மேற்பரப்பினை குளிர்மையானதாக மாற்றுவதாக தெரிவிக்கப்படகின்றது.
0 comments:
Post a Comment