அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, இன்று மொகாலியில் துவங்குகிறது. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற காத்திருக்கிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் துவங்குகிறது.

சச்சின் சாதனை?:
இந்திய அணிக்கு பேட்டிங் தான் பலம். சேவக், காம்பிர், முரளி விஜய், ரெய்னா, டிராவிட், லட்சுமண் என அணியின் பேட்டிங் வரிசை, ஆஸ்திரேலியாவை மிரட்டுகிறது. தனது 170 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (13, 837 ரன்), இன்னும் 163 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை எட்டி புதிய சாதனை படைக்கலாம். தற்போது சூப்பர் பார்மில் இருக்கும் சச்சின், இத்தொடரில் அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.
 
Sachin Tendulkar plays a lofted shot during nets


தோனி மிரட்டல்:
கடந்த 2008 ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பேற்றார் தோனி. அதற்குப் பின் இந்தியா பங்கேற்ற டெஸ்ட் தொடர்களில் தோல்வியே பெற்றதில்லை. விளையாடிய 7 டெஸ்ட் தொடர்களில் 5 வெற்றி, 2 "டிராவை' பதிவு செய்துள்ளது. இன்று துவங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், இந்திய அணிக்கு தோனி வெற்றி தேடித் தருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

MS Dhoni finds something to smile about

சாதிப்பாரா லட்சுமண்?:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அசத்தக் கூடியவர் லட்சுமண். கடந்த 2001 ம் ஆண்டு கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 281 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார் லட்சுமண். இந்த முறையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லட்சுமண் ரன் மழை பொழிந்தால், இந்தியா எளிதில் வெற்றியை எட்டலாம்.

பவுலிங் பலவீனம்:
இந்திய அணியின் பவுலிங் தான் பலவீனமாக உள்ளது. தொடருக்கு முன் நடந்த பயிற்சி போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், பெரிய அளவில் சாதிக்க வில்லை. சமீபகாலமாக ஜாகிர் கான், இஷாந்த் சர்மாவின் செயல்பாடுகளும் பாராட்டும்படியாக இல்லை. இது இத்தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.

ஹர்பஜன் சந்தேகம்:
மொகாலி ஆடுகளம் சுழலுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால், ஹர்பஜன் இந்திய அணியின் முக்கிய பலமாக கருதப்படுகிறார். ஆனால் காலில் ஏற்பட்ட வலி காரணமாக இன்றைய போட்டியில், ஹர்பஜன் பங்கேற்பாரா என்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. இவர் இடம் பெற வில்லை என்றால், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா இருவருக்கும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Harbhajan Singh is a doubtful starter for the first Test

ஆஸி.எதிர்பார்ப்பு:
கடந்த 2008 ம் ஆண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, "பார்டர்-கவாஸ்கர்' கோப்பையை இந்தியாவிடம் (2-0) இழந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அசத்தினர். வாட்சன், காடிச், நார்த் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். இவர்களது அபார ஆட்டம், மொகாலி டெஸ்டிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

Ricky Ponting at a training session ahead of the first Test

பவுலிங் மிரட்டல்:
சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹசி ஆகியோர் அசத்த வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு, மிரட்டலாக உள்ளது. ஹில்பெனாஸ், ஜான்சன், போலிஞ்சர் ஆகியோர் வேகத்திலும், ஹாரிட்ஸ், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சுழலில் கலக்க உள்ளனர்.

அணிகள் வருமாறு:
இந்தியா: தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், டிராவிட், லட்சுமண், ரெய்னா, முரளி விஜய், ஜாகிர் கான், ஹர்பஜன், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா மற்றும் சத்தேஷ்வர் புஜாரா.
ஆஸ்திரேலியா: பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹசி, வாட்சன், காடிச், பிலிப் ஹியுஸ், நார்த், போலிஞ்சர், ஹில்பெனாஸ், ஜான்சன், டிம் பெய்ன், ஜேம்ஸ் பட்டின்சன், பீட்டர் ஜார்ஜ், ஹாரிட்ஸ், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க். 

தோனி நம்பிக்கை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறியது: டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரை கடைசி 2 நாட்கள் தான் வெற்றியை நிர்ணயிக்கும். அப்போது பந்துகள் நன்கு "ஸ்விங்' மற்றும் "பவுன்ஸ்' ஆகும். சுழலுக்கும் நல்ல முறையில் ஒத்துழைக்கும். இதில், சிறப்பாக செயல்படும் அணி, எளிதில் வெற்றியை எட்டலாம். "ஷார்ட் பிட்ச்' பந்துகளை சமாளிப்பதில் இந்திய வீரர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பொதுவாக இவ்வகை பந்துகளை எதிர்கொள்ளாமல் இருப்பது சிறந்தது. இது இரு கேப்டன்களுக்கு இடையிலான மோதல் அல்ல. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி. கேப்டன் பொறுப்பு என்பது, ஒரு சில முக்கிய ஆலோசனை வழங்குவது தான். ஆனால் போட்டியில் திறமை காட்டுவது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் வேலை. சமீபகாலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனால் இத்தொடரிலும் வெற்றி பெற கடுமையாக முயற்சிப்போம். இவ்வாறு தோனி தெரிவித்தார். 
பாண்டிங் உறுதி
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் கூறியது: இத்தொடரில் வெற்றி பெறவே இங்கு வந்துள்ளோம். நாங்கள் வகுத்துள்ள வியூகத்தின் படி, சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். இந்திய சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன், போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என இந்திய அணி கூறி வருகிறது. ஆனால் அவர் பயிற்சியில் பங்கேற்று வருகிறார். ஹர்பஜன் பங்கேற்பதை ரகசியமாக வைத்திருக்கிறது இந்தியா. என்னைப் பொறுத்த வரை ஹர்பஜன் கட்டாயம் பங்கேற்பார். அவர் இடம் பெறாவிட்டாலும், இந்திய அணியில் அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா ஆகியோர் உள்ளனர். ஓய்வு பெறுவது பற்றி தற்போது சிந்திக்க வில்லை. இழந்த பார்மை மீட்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இந்திய வீரர் சச்சின், தற்போதும் போட்டிளில் அசத்தி வருவது ஆச்சரியம் அளிக்கிறது. அவரைப் பின்பற்றி சாதிக்க முயற்சிப்பேன். இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார். 

ஆஸி. ஆதிக்கம்
* இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 20 டெஸ்ட் தொடர்களில் விளையாடிய உள்ளன. இதில், அதிக பட்சமாக ஆஸ்திரேலியா 10 தொடர்களில் வென்று கோப்பை கைப்பற்றியுள்ளது. இந்தியா 5 தொடர்களை வென்றுள்ளது. 5 தொடர்கள் "டிராவில்' முடிந்துள்ளன. 
* இவ்விரு அணிகளும் இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில், ஆஸ்திரேலியா 34, இந்தியா 18 போட்டிளில் வெற்றி பெற்றுள்ளன. 23 போட்டிகள் "டிராவில்' முடிந்துள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்க வில்லை. 


"டாப்-ஸ்கோரர்' சச்சின்
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை பெறுகிறார் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். 29 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2748 ரன்கள் குவித்துள்ளார். இப்பட்டியலில் "டாப்-5' வீரர்கள்:
வீரர்    போட்டி    ரன்    சதம்    அரை சதம்
சச்சின் (இந்தியா)    29    2748    10    11
லட்சுமண் (இந்தியா)    24    2204    6    10
ஹைடன் (ஆஸி.,)    18    1888    6    8
டிராவிட் (இந்தியா)    26    1837    2    11
பாண்டிங் (ஆஸி.,)    23    1787    6    6

ஹர்பஜன் அசத்தல்
இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் இந்தியாவின் கும்ளே. 20 போட்டிகளில் பந்து வீசிய இவர், 111 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இப்பட்டியின் 2 வது இடத்தில், இந்தியாவின் ஹர்பஜன் (14 போட்டி, 79 விக்.,) மற்றும் கபில்தேவ் (20 போட்டி, 79 விக்.,) உள்ளனர். இப்பட்டியலில் "டாப்-5' வீரர்கள்:
வீரர்    போட்டி    விக்கெட்
கும்ளே (இந்தியா)    20    111
ஹர்பஜன் (இந்தியா)    14    79
கபில்தேவ் (இந்தியா)    20    79
பிரசன்னா (இந்தியா)    13    57
பேடி (இந்தியா)    12    56

இதுவே அதிகம்
* டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 705/7 (சிட்னி, 2004). இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ஸ்கோர் 674 (அடிலெய்டு, 1948).
* இந்திய அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் 58 (பிரிஸ்பேன், 1947). ஆஸ்திரேலியாவின் குறைந்த பட்ச ஸ்கோர் 83 (மெல்போர்ன், 1981). 

ராசியான மைதானம்
இன்று போட்டி நடக்க உள்ள மொகாலி மைதானம், இந்தியாவுக்கு ராசியானது. இங்கு விளையாடிய 9 போட்டிகளில், 3 ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் "டிராவில்' முடிந்துள்ளன. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான (1994) ஒரு போட்டியில் மட்டும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. 
* இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இம்மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் (2008) மோதியுள்ளன. இதில், இந்தியா 320 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.



வெற்றியுடன் துவக்குமா இந்தியா?


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.