அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

இரட்டை சூரியன்
 ‘டாட்டூயின்’ என்பது அந்த உலகம். அங்கு 2 சூரியன்கள். இரண்டும் அவ்வப்போது வந்துபோகும். ‘ஸ்டார் வார்ஸ்’ என்ற வரிசையில் வந்த ஹாலிவுட் படங்கள் அனைத்திலும் இத்தகைய காட்சிகள் இருக்கும். இது கதையில்லை. 
உண்மைதான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.பிரபஞ்சத்தில் ‘லைரா’ என்ற ஏரியா பற்றி அமெரிக்காவின் டென்னசி பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். அப்பகுதியில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் ஏற்படும் மாற்றங்களை அதிநவீன தொலைநோக்கிகள் மூலம் தொடர்ச்சியாக கண்காணித்தனர். 


அப்பகுதியில் சுமார் ஒரு டஜன் கிரகங்களுக்கு இரண்டிரண்டு சூரியன்கள் இருப்பது தெரியவந்துள்ளது.பூமியில் இருந்து இது சுமார் 49 ஒளிஆண்டு (49 லட்சம் கோடி கி.மீ.) தூரத்தில் இருக்கிறதாம். இப்போது புறப்பட்டு ஒளியின் வேகத்தில் ராக்கெட்டில் போனால்கூட 49 ஆண்டு கழித்துதான் அங்கு சென்றடைய முடியும்.. அவ்வளவு தொலைவு.இதுதொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். பூமி போல, உயிரினங்கள் வாழத் தகுந்த கிரகங்கள் அங்கு ஏதேனும் இருக்கிறதா என்று விரைவில் தெரிவரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

2 சூரியன் இருந்தா என்ன?

நமக்கு ஒரே ஒரு சூரியன்தான். சமத்தாக நம்மைப் போலவே காலையில் எழுந்து சாயந்திரம் தூங்கப் போய்விடுகிறது. ஒரு நாளைக்கு ஒரு ரவுண்டு மட்டுமே அடிப்பதால் தினமும் காலண்டர் ஷீட் ஒன்று மட்டுமே கிழிக்கிறோம். 2 சூரியன் இருந்தால் இவையெல்லாம் குளறுபடியாகும். இரவு, பகல் தாறுமாறாகும். ஒன்று ‘பை பை’ சொல்லிவிட்டு இருட்டுகிற நேரத்தில்தான் இன்னொன்று பிசியாகும். சம்மர் பட்டையை கிளப்பும். ஒரு சந்தோஷம்.. சம்மர் ஹாலிடே 2 முறை கிடைக்கும்.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.