மீன்களுக்கு தண்ணீரில் நீந்துவதற்கான திறமை மட்டுமல்ல, தண்ணீரில் அப்படியே அசைவற்று நிற்கக்கூடிய திறமையும் உண்டு. மீன்காட்சி சாலைகளில் உள்ள மீன்களைக் கவனித்துப் பார்த்தால் இது உங்களுக்குத் தெரியும். சில சமயங்களில், உடலில் எப்பகுதியையும் அசைக்காமல் மீன், தண்ணீரின் மேற்பகுதியிலோ, நடுப்பகுதியிலோ அப்படியே அசைவற்று நிற்பதைப் பார்க்கலாம்.
மீன்கள் இப்படி தண்ணீரில் நிலையாக நிற்பதற்கு, அவற்றின் உடலுக்குள்ளே உள்ள பிரத்தியேகமான வாயுப் பை உதவி செய்கிறது. ஏறத்தாழ, ஒரு பலூனின் வடிவில் உள்ள இந்த வாயுப் பை, மீனின் வயிற்றிற்கும், குடலுக்கும் மேலே அமைந்திருக்கிறது. மீனின் மொத்த உடற்பரப்பில் ஏறத்தாழ 5-லிருந்து 6 சதவிகிதம் வரை இந்தப் பை இருக்கும். ஆக்ஸிஜன், கார்பன்}டை}ஆக்ûஸடு, நைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவை இந்தப் பையில் நிறைந்திருக்கும்.
பைக்குள் உள்ள வாயுவின் பரப்பை அதிகரிப்பதாலும், குறைப்பதாலும் தன் உடல் எடையை முறைப்படுத்துகிறது. அதனால், தண்ணீருக்குள் அசைவற்று ஆழ்ந்திருக்கிறது. வாயுப்பை முழுமையாக நிறைந்திருக்கும்போது, மீன் தண்ணீரின் மேல் தளத்தில் மிதந்துகொண்டிருக்கும்.
ஓரளவு வாயுவை வெளியே விடும்போது கீழே வந்து தண்ணீருக்குள் தங்கி நிற்க மீனால் முடியும். தண்ணீரின் ஆழத்திற்கு ஏற்ற வகையில் வாயுப் பையின் பருமனையும், அதில் அடங்கியுள்ள வாயுவின் அளவையும் முறைப்படுத்துவதற்கான தன்மைகள் மீனின் உடலில் உண்டு.
கொடிகள் ஏன் அடையாளச் சின்னங்களுடன் இருக்கின்றன?
கொடிகளின் தோற்றம் கப்பல் மாலுமிகளின் தொழிற் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. கடலில் கப்பல்களும், படகுகளும் ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொள்ள இந்தக் கொடிகள் உதவுகின்றன. போரிலும், செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடுகளுக்கும் கொடியின் பங்கு மிகவும் அதிகம். அரசியல் கட்சிகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும் கொடிகள் உள்ளதால், ஒரு கொடி எந்த கட்சியைக் குறிக்கிறது அல்லது எந்த அமைப்பைக் குறிக்கிறது என்று நாம் தொலைவிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும்.
விளையாட்டுப் போட்டிகளிலும், பல பிரிவினரும், பல நாடுகளும் ஒன்று சேர்கிற சந்தர்ப்பங்களிலும், கொடிகளில் உள்ள சின்னங்கள் ஒவ்வொரு குழுவையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள உதவுகின்றன.
0 comments:
Post a Comment