அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

உலக சிறுவர் தினம்


ஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் 
முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான 
காரணம் சிறுவர்களுக்கெதிராக 
அரங்கேற்றப்படுகின்ற 
துஷ்பிர யோகங்ளையும் அநீதிகளையும் 
இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவி
தமான உரிமைகளையும் 
பெற்றுக் கொடுப்பதேயாகும்








இன்றையஉலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் 
ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம்  
விளங்குகின்றதுசிறுவர்துஷ்பிரயோகம்  
என்ற விடயமானது 
வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி 
அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித 
வேறுபாடுகளுமின்றி உலகம்
முழுவதும் காணப்படும் 
சர்வதேசத்தின்
 கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் 
கூட வளர்ச்சி அடைந்து வரும் 
நாடுகளில் அது ஒரு பாரியபிரச்சினையாக 
உருவெடுத்து வருகின்றதுசிறுவர்கள் என்போர் 
மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் 
கருதப் படுகின்றனர்

அத்தோடுஅவர்கள் அடுத்தவர்களில் தங்கிவாழ்கின்ற 
பலவீனர்களாகக் 
காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் 
அதிகம் மீறப்படுகின்றன. இவ்வாறான உரிமைமீறல்கள்துஷ்பிரயோகங்களில் இருந்தும் 
சிறுவர் களைப் பாதுகாப்பத காகப் பல கொள்கைகள் மற்றும் 
பிரகடனங்கள்காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு 
வந்துள்ளன
அவற்றிடையே 1989 இல் .நாசபையில் வெளியிடப்பட்ட 
சிறுவர் உரிமைகளைப் பற்றியகொள்கையானது 
சிறுவர்களைப் 
பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க 
அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது

மேலும் .நா சபையானது 18வயதுக்குட்பட்ட  
அனைவரையும்
 சிறுவர்கள் என வரையறுத் துள்ளது.
சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் 
என்ற வகையில் 
அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு 
வழிநடத்த வேண்டும்.

 

ஆனால் இன் றைய மனித சமுதாயமானது நாகரிகத்தின் விளிம்பை 
நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அதேவளை சிறுவர்களுக்கெதிராக 
மேற் கொள்ளப்படும் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் 
அதிகரித்துக் கொண்டேசெல்கின்றன.
சிறுவர் துஷ்பிரயோகத் தின் பல்வேறு வடிவங்கள்

உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.
உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.
பாலியல்ரீதியான துஷ்பிரயோகம்.
உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.
புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.

குறிப்பாக உலகில் உள்ள அனைத்துசிறுவர்களும் இவற்றுள்  
ஏதாவதொரு துஷ்பிரயோகத்திற்கு முகம் கொடுத்தேவருகின்றனர் 
என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல ஏற்பாடுகள் 
இன்றைய நவீன உலகில் காணப்பட்டாலும் கூட 
அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு 
உள்ளாக்கப் பட்டு வருகின்றனர்

மேற்படி சிறுவர்  துஷ்பிரயோக வடிவங்களை நீக்குவதற்காக 
உலகின் பல அரசுகள்அரச சார்பற்றநிறுவனங்கள்சமூக மற்றும் 
சமய நிறுவனங்கள் போன்ற வற்றால் பல ஏற்பாடுகள் 
செய்யப்படுகின்றன
மேற்படி அனைத்து நிறுவனங்களினதும்
சேவைகளை 
ஒருங்கிணைத்து நடை முறைப்படுத்துவது 
அத்தியவசியமாகும்
இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் 
பொருட்டு உலக சிறுவர்தினத்தை சிறப்பாக 
திட்டமிட்டுப் பயன்படுத்தலாம்மேலும் சிறுவர் தினம்  சம்பந்தமாக 
குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக 
செயற்படுவதில்எந்தப் பயனும் இல்லைவருடத்தில் 
ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் 
அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உட்பட வேண்டியது
அவசியமாகும்.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.