அமெரிக்காவின் கன்ஸாஸில் மாபெரும் தேநீர் கோப்பைக்காக படைக்கப்பட்ட கின்னஸ் சாதனையை இன்று இலங்கை முறியடித்தமையே அதுவாகும்.
காலை 10.00 மணியளவில் கொழும்பு பி.ஆர். சி. மைதானத்தில் இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெற்றது.
கிளாக்ஸோஸ்மித் நிறுவனத்தின் பிரபல மோல்ட் பானமான வீவாவினால் இச்சாதனை இன்று நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வு ஆரம்பம் முதல் இறுதி வரை லண்டனைச் சேர்ந்த கின்னஸ் பிரதிநிதி ஒருவரால் கண்காணிக்கப்பட்டுச் சாதனை படைத்தமைக்கான உறுதிப்படுத்தல் சான்றிதழ், இலங்கை ஜி.எச்.கேயின் நுகர்வோர் பிரிவுத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சச்சி தோமஸிடம் கையளிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் இச்சாதனையை 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி அமெரிக்க, கன்ஸாஸ், போர்ட் ஸ்கொட் சுகாதார நிலையம் நிகழ்த்தியிருந்தது.
இதன் போது 3000 லீற்றர் அதாவது 660 கலன் தண்ணீர உபயோகிக்கப்பட்டு அந்த தேநீர் தயாரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போதைய சாதனையின் போது 4000 லீற்றர் தண்ணீர் விசேட பொய்லரின் மூலம் கொதிக்க வைக்கப்பட்டு 64 கிலோ கிராம் தேயிலை , 160 கிலோ கிராம் சீனி, 875 கி.கிராம் வீவா சேர்த்து தேநீர் தயாரிக்கப்பட்டது.
இதற்கென 10 அடி உயரமும் 8 அடி அங்குலமும் கொண்ட விசேட கோப்பை உருவாக்கப்பட்டிருந்தது. 2000 வோல்டேஜ் கொண்ட 6 ஹீட்டர்களினால் தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது.. தேநீரைச் சூடாக வைத்திருக்க, மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்காரவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வுக்கு பெருந்திரளானவர்கள் வருகை தந்திருந்தனர். இவர்களுக்கு இச்சாதனைத் தேநீரைச் சுவைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment