
கலிபோர்னியா: பிரின்ஸ் செகாலா என்பவரின் 2 வயது மகனும் 3 வயது மகளும் 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது தந்தையால் கடத்திச்செல்லப்பட்டார்கள்.
எங்கு தேடியும் பிள்ளைகளைக் கண்டுபிடிக்க முடியாத செகாலா மிகவும் மன உளைச்சளுக்கு ஆளானார். சில மாதங்களுக்கு முன்னர் செகாலாவின் கணவர் குழந்தைகள் மெக்சிகோவில் இருப்பதாக தகவல் அளித்தார்.
இதையடுத்து செகாலா தனது குழந்தைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். அப்போது தான் அவருக்கு இந்த யோசனை தோன்றியது, தனது குழந்தைகளின் பெயரை ஃபேஸ் புக்கில் தேடிப்பார்த்தார். செகாலா நினைத்தது போல் அவரது மகளின் பெயரைக் கொண்ட ஒரு பெண் இருந்தார், முதலில் அவருடன் நண்பரானார் செகாலா.
இந்த நட்பின் மூலம் அந்த பெண்ணின் குடும்பப் படத்தைப் பார்த்தார் செகாலா. அதிஷ்டவசமாக அந்த பெண் தான் செகாலாவின் மகள். இதையறிந்த செகாலாவின் மகள் சந்தோசப்படாமல் தனது தாயாருடனான உறவை முறித்துக் கொண்டார்.
எனினும் சோர்டவடையாத செகாலா போலீஸில் புகார் செய்தார். இதனை விசாரித்த போலீஸார் செகாலாவின் கணவரைக் கைது செய்தனர். தற்போழுது செகாலாவின் 16 வயது மகனும் 17 வயது மகளும் ஃபுளோரிடாவில் உள்ள ஒரு குழந்தைகள் நலக் காப்பகத்தில் உள்ளனர். இந்த வழக்கு பற்றிய விசாரணை களிபோர்னியாவிலுள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நன்றி தினகரன்
0 comments:
Post a Comment