கிரீன் பார்க் மைதானம் கிருகர் தேசியப் பூங்கா அருகே அமைந்துள்ளது. இந்த பூங்கா, ஒட்டகச் சிவிங்கிகளுக்கு புகழ்பெற்றது. அதை நினைவுபடுத்தும் விதமாக மைதானம்
கிரீன் பார்க் மைதானம்
கால்பந்துப் போட்டி நடைபெறும் பிரமாண்ட மைதானங்களில் கேப் டவுனிலுள்ள கிரீன்பாயிண்ட் மைதானமும் ஒன்று. சிக்னல் ஹில் பகுதிக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் கேப்டன் டவுன் மையத்தில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான இந்த நகரில் இந்த கால்பந்து மைதானம் 2007-ம் ஆண்டில் கட்டத் துவங்கி 2009-ல் திறக்கப்பட்டது. 69,070 பேர் அமர்ந்து போட்டியை ரசித்துப் பார்க்கலாம்.
உலகக் கோப்பைப் போட்டிக்காகவே இந்த மைதானம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தையொட்டி 60 ஹெக்டேர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்திலிருந்து சற்று தொலைவில் கடற்கரை அமைந்துள்ளது. கடற்கரையையும், மைதானத்தையும் இணைக்கும் வகையில் சாலை அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 கால்பந்து ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் அரை இறுதி ஆட்டம் ஒன்றும் நடைபெறுகிறது.

மொம்பேலா மைதானம்
போட்டிகள் நடைபெறும் 10 மைதானங்களில் அழகாக வடிவமைக்கப்பட்ட மைதானங்களில் மொம்பேலா மைதானமும் ஒன்று. மேற்கு நெல்ஸ்புரூட் நகரில் அமைந்துள்ளது. கால்பந்து, ரக்பி போட்டிகளை இங்கு நடத்த முடியும். 2007-ம் ஆண்டு கட்டத் துவங்கி 2009-ம் ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டன. 43,589 பேர் அமர்ந்து ஆட்டங்களை ரசிக்க முடியும். கிருகர் தேசியப் பூங்கா அருகே இந்த மைதானம் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்கா, ஒட்டகச் சிவிங்கிகளுக்கு புகழ்பெற்றது. அதை நினைவுபடுத்தும் விதமாக மைதானத்தின் 18 கூரைகள் ஒட்டகச் சிவிங்கி போல வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மைதானத்துக்கு ஜிராபி ஸ்டேடியம் என்றும் பெயருண்டு. உலகக் கோப்பை கால்பந்தின் 4 ஆட்டங்கள் இங்கு நடைபெறவுள்ளன.

எல்லிஸ் பார்க் மைதானம்
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் அமைந்துள்ளது எல்லிஸ் பார்க் கால்பந்து மைதானம். இது 1929-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 62,567 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும். 7 உலகக் கோப்பை ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளன.
1948 முதல் 1954 வரை 6 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 1956-ம் ஆண்டு வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானம் துவங்கப்பட்ட பின்னர் இந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது நிறுத்தப்பட்டது. தற்போது இந்த மைதானத்தில் ரக்பி, கால்பந்து விளையாட்டுகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அவ்வப்போது திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கோக-கோலா நிறுவனம் இந்த மைதானத்துக்கு ஸ்பான்ஸர் செய்வதால் இதற்கு கோக-கோலா மைதானம் என்ற பெயரும் உண்டு.

நெல்சன் மண்டேலா மைதானம்
தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது நெல்சன் மண்டேலா கால்பந்து மைதானம். தென்னாப்பிரிக்காவின் தன்னிகரில்லா தலைவர் நெல்சன் மண்டேலாவின் பெயரில் அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு கட்டத் துவங்கி 2009-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. நகரின் மையப் பகுதியில் அழகுற அமைந்துள்ளது. போட்டிக்காக கட்டப்பட்டுள்ள 3 கடற்கரையோர மைதானங்களில் இதுவும் ஒன்று. மைதானத்தின் அருகிலேயே நார்த் எண்ட் ஏரி கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. 48,459 ஆயிரம் பேர் அமர்ந்து இங்கு போட்டியை ரசிக்கலாம்.
கால்பந்து போட்டி மட்டுமல்லாமல் ரக்பி விளையாட்டையும் இங்கு நடத்தலாம். ஏராளமான ரக்பி, கால்பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. உலககக் கோப்பை கால்பந்தின் 5 லீக் ஆட்டங்கள், கால் இறுதி, 3-ம் இடத்துக்கான ஆட்டங்கள் என மொத்தம் 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன
பீட்டர் மோகாபா
இந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்காக புதிதாக மேம்படுத்தப்பட்ட 5 மைதானங்களில் இதுவும் ஒன்று. தென்னாப்பிரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் பீட்டர் மோகாபாவின் பெயர் இந்த மைதானத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.
போலோக்வான் (முன்பு பீட்டர்ஸ்பர்க்) நகரில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் 46 ஆயிரம் பேர் போட்டியை ரசிக்க முடியும். கடந்த மே மாதத்தில் இங்கு முதல் முறையாக சர்வதேச கால்பந்து போட்டிநடத்தப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் 4 ஆட்டங்கள் இங்கு நடைபெறவுள்ளது. ரூ. 705 கோடி செலவில் இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது.
லூப்டஸ் வெர்ஸ்பிஃல்ட்
பிரிட்டோரியா நகரில் அமைந்துள்ள இந்த மைதானம் தென்னாப்பிரிக்காவில் உள்ள பழமையான மைதானங்களில் ஒன்று. 1903-ம் ஆண்டு முதல் இங்கு பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டண. 1948-ம் ஆண்டு முதல் ரக்பி மற்றும் கால்பந்து மைதானமாக மாறியது. 2008-ம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த மைதானத்தில் 52 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். கடந்த 2009-ல் கியுரி கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இந்த மைதானத்தில்தான் நடத்தப்பட்டது.
÷இந்த உலகக் கோப்பையின் போது லூப்டஸ் வெர்ஸ்பிஃல்ட் மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து 1 மணி நேர பயண தூரத்தில் இந்த மைதானம் அமைந்துள்ளது. பிரிட்டோரியா நகரில் விளையாட்டு அமைப்பைத் தொடங்கிய ராபர்ட் ஓவன் லூப்டஸ் வெர்ஸ்பிஃல்டை கெüரவிக்கும் வகையில் இந்த மைதானத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

1 comments:
free sms
http://alturl.com/8zis
Post a Comment